மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் தலையிட்ட மத்திய அரசு: நெஸ்லே தலை தப்புமா?
டெல்லி: மேகி நூடுல்ஸ் மாதிரியை உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் மோனோசோடியம் க்ளூட்டமேட் என்ற ரசாயன உப்பும், ஈயமும் அளவுக்கு அதிகமாக இருப்பதை உத்தர பிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டுபிடித்தது. இந்த ரசாயன உப்பு மற்றும் ஈயத்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெஸ்ட்லே நிறுவனம் மீது உத்தர பிரதேசத்தில் உள்ள பாரபங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை, உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஈயம்
மேகி நூடுல்ஸ் குறித்து ஆய்வு நடத்திய உத்தர பிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் அதில் மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் அளவுக்கு அதிகமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளது.

விசாரணை
மேகி நூடுல்ஸ் விவகாரத்தை தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம்(எப்எஸ்எஸ்ஏஐ) தன் கையில் எடுத்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும்.

நூடுல்ஸ்
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மேகி நூடுல்ஸ் மாதிரிகளை உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் சேகரித்து ஆய்வை துவங்கியுள்ளது. சில மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் இன்று வரக்கூடும். மீதமுள்ள மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரி முடிவுகள் இன்னும் 2-3 நாட்களில் வரும்.

நடவடிக்கை
மேகி நூடுல்ஸில் மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் அதிக அளவில் இருப்பது உறுதியானால் நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு தொடரப்படும். இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மக்களை ஏமாற்றும் வகையில் இருந்த மேகி விளம்பரம் குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது என்றார் பாஸ்வான்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications