"ஒரே குத்து.." பிறந்த நாளுக்கு துபாய் கூட்டி செல்லாத கணவனை அடித்தே கொன்ற மனைவி.. நம் நாட்டில்தாங்க!
புனே: மகாராஷ்டிராவில் தனது பிறந்த நாளுக்கு வெளியே அழைத்துச் செல்லாத கணவனை மனைவி அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகக் கணவன் மனைவி இடையே சண்டை வருவது இயல்பான ஒரு விஷயம் தான். சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட சண்டை போடும் ஜோடிகளை நம்மையே சுற்றியே பார்க்க முடியும்.

இவை வெறுமன திட்டிக் கொண்டு வாய் சண்டையாக இருக்கும் வரை பிரச்சினை இல்லை. அதேநேரம் இது அடிதடியாக மாறினால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படியொரு ஷாக் சம்பவம் தான் மகாராஷ்டிராவின் புனேவில் நடந்துள்ளது.
ஷாக் சம்பவம்: பிறந்த நாளுக்குக் கணவன் தன்னை துபாய்க்குக் கூட்டிச் செல்ல மறுத்ததால் ஆத்திரமடைந்த மனைவி சரமாரியாகத் தாக்கியுள்ளார். முகத்திலேயே சரமாரியாக மனைவி குத்திய நிலையில், படுகாயமடைந்த கணவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் புனேவின் வானவ்டி பகுதியில் உள்ள ஒரு ஆடம்பரமான குடியிருப்பு பகுதியில் நடந்துள்ளது.
பெங்களூர் பெண் அதிகாரி கொலை! சட்ட விரோத சுரங்கத்தில் ரெய்டு போன சில நாட்களில் பயங்கரம்! டிரைவர் கைது
இதில் உயிரிழந்த நபர் 36 வயதான நிகில் கண்ணா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் 38 வயதான ரேணுகா என்ற பெண்ணை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், இந்த சண்டையில் மனைவியின் ஆத்திரத்தால் கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
என்ன நடந்தது: இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடந்துள்ளது. தனது பிறந்த நாளுக்குக் கணவர் தன்னை துபாய்க்கு அழைத்துச் செல்லவில்லை என்று ரேணுகா சண்டை போட்டுள்ளார். பிறந்த நாள், திருமண நாட்களுக்குத் தன்னை வெளியே அழைத்துச் செல்வதில்லை விலையுயர்ந்த கிப்ட் வழங்குவதில்லை எனச் சண்டை போட்டுள்ளார்.
இது குறித்து ரேணுகா கேட்ட எந்தவொரு கேள்விக்கும் நிகில் சரியான பதிலை அளிக்கவில்லையாம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு கட்டத்தில் ரேணுகா ஆத்திரமடைந்து, நிகில் முகத்தில் குத்தியுள்ளார். அது மிகவும் வலிமையாக இருந்ததால் நிகிலின் சில பற்கள் உடைந்துவிட்டது. அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதில் அதிகளவில் ரத்தம் வெளியேறிய நிலையில், நிகில் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்" என்றனர்.
உயிரிழப்பு: இதையடுத்து பதறிய மனைவி ரேணுகா அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், உடனடியாக இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஐபிசி 302இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மனைவி ரேணுகாவை கைது செய்துள்ளனர். ரேணுகா அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் குத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் அடித்த அடி பலமாக இருந்ததே உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்துவிட்டது அவர் மீது தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications