பெங்களூர் பெண் அதிகாரி கொலை! சட்ட விரோத சுரங்கத்தில் ரெய்டு போன சில நாட்களில் பயங்கரம்! டிரைவர் கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் சுரங்க துறை துணை இயக்குநர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பமாக அவரது டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சாதாரண பெண்ணாக இருந்தாலும் சரி, அதிகாரத்தில் இருப்போராக இருந்தாலும் சரி அவர்களுக்கு உரியப் பாதுகாப்பு கிடைக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்வியாகவே இருக்கிறது.

 Bangalore police has arrested Driver in Govt Official Murder

இப்படிதான் நமது அண்டை மாநிலமாகக் கர்நாடகாவில் சுரங்க துறையில் துணை இயக்குநராக இருந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

பெண் அதிகாரி கொலை: கர்நாடக தலைநகர் பெங்களூரில் பணியாற்றி வந்த இந்த பெண் புவியியலாளர் அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றிய வந்தவர் கே.எஸ். பிரதிமா. இவர் சனிக்கிழமை இரவு அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இரவு 8.30 மணியளவில் வீட்டில் வைத்து கொலை செய்யப்படுவதற்கு முன்பு, அவரது ஓட்டுநர் தான் அலுவலக பணிகளை முடித்து அவரை வீட்டில் விட்டுள்ளார். இதனால் சந்தேக அடிப்படையில் அந்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். சுரங்க துறையில் முக்கிய அதிகாரியாக பணியாற்றிய அவரது கணவரும் மகனும் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளியில் வசித்து வருகிறார்கள் இதனால் பிரதிமா பெங்களூரில் தனியாகவே வசித்து வந்தார்.

ரெய்டு: பிரதிமா கடந்த மாதம் தான் கர்நாடகாவில் சட்டவிரோதமாக இயங்கும் சுரங்கங்களில் மீது ரெய்டு நடத்த உத்தரவிட்டிருந்தார். பிரதிமா மிகவும் துணிச்சலான அதிகாரி என்றும் யாருக்கும் அஞ்சாமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வந்தார் என்றும் அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

துணிச்சலான அதிகாரி: இது குறித்து பிரத்திமா உடன் பணியாற்றிய தினேஷ் மேலும் கூறுகையில், "பிரதிமா மிகவும் ஆற்றல் வாய்ந்த பெண்... அவர் துணிச்சலான அதிகாரியாகவே இருந்தார். அவர் சமீபத்தில் கூட முறைகேடாகச் செயல்படும் சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தார். அவருக்கு எங்கள் டிப்பார்ட்மெண்டிலேயே கூட நல்ல பெயர் தான் இருக்கிறது. சட்டப்படி மட்டுமே அவர் நடவடிக்கை எடுத்து வந்தார். அவருக்கு எதிரிகளும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை" என்றார்.

இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் மேலும் கூறுகையில், "வழக்கம் போல், சனிக்கிழமை இரவு 8 மணியளவில், பிரதிமா வீட்டிற்கு வந்துள்ளார். நேற்றிரவு முதலே பலரும் போன் செய்த போதிலும் அவர் மொபைல எடுக்கவில்லை. இதையடுத்து அவருக்கு எதாவது பிரச்சினையா எனப் பார்க்க அவரது மூத்த சகோதரர் நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். அப்போதுதான் பிரதிமா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

விசாரணை: இதையடுத்து அவர் அளித்த தகவல்படி நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். தடயவியல் அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். இது குறித்து விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணை முடிந்த பிறகே கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். பல்வேறு கோணங்களில் இப்போது விசாரணையை ஆரம்பித்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

இப்போது கைது செய்யப்பட்ட அந்த டிரைவர் கடந்த வாரம் தான் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அந்த டிரைவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். திடீரென தன்னை வேலையை விட்டு நீக்கியதால் செய்ததால் ஆத்திரத்தில் அந்த பிரதிமாவை கொலை செய்ததாக அந்த டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த டிரைவர் பெயர் கிரண் என அடையாளம் காணப்பட்டுள்ளது, கொலை செய்துவிட்டு பெங்களூரில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சாமராஜநகருக்கு பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+