Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பிவிட்ட திரிணாமூல் எம்பி.. பாஜக எம்பியின் டிகிரியை கேட்டதால் பழி! மொய்த்ரா வக்கீல் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பியதற்காக பணம் வாங்கினார் தன் மீது குற்றம்சாட்டிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தெஹத்ராய் ஆகியோருக்கு திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

நாடாளுமன்ற மக்களவையில் ஆக்கிரோஷமான கேள்விகள் மூலமாக நாடு முழுவதும் புகழ்பெற்ற எம்பியாக அறியப்பட்டவர் மஹுவா மொய்த்ரா. குறிப்பாக மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் கொள்கைகளை மிகவும் காட்டமாக அவர் விமர்சித்து வந்தார். அனைத்து மொழி ஊடகங்களிலும் முன்னுரிமை கொடுத்து வெளியிடும் அளவுக்கு மஹுவா மொய்த்ராவின் பேச்சுக்கள் பிரபலம். குறிப்பாக அதானி - ஹிண்டன்பெர்க் சர்ச்சை பூதாகரமானபோது அது தொடர்பாக அனல் தெறிக்க கேள்விகளை எழுப்பினார் மஹுவா.

Mahua Moitra legal notice against BJP MP Nishikant Dubey and advocate

இந்த நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக பணம் பெற்றதாக பாஜக எம்பி புயலை கிளப்பி உள்ளார். அதானி விவகாரம் குறித்து மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் பெரிய தொகையை பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள விசாரணைக் குழு ஒன்றை அமைத்திட வேண்டும் என நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுத்தி இருக்கிறார்.

அதில், "தொழிலதிபர் தர்ஷன் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரம் உள்ளது. மக்களவையில் அவர் 61 கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில் 50 கேள்விகள் அதானி குழுமத்தை பற்றியே உள்ளன." என வழக்கறிஞர் தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டி கடிதத்தில் நிஷிகாந்த் துபே தெரிவித்து இருக்கிறார். சபாநாயகர் ஓம் பிர்லா மட்டுமின்றி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் ராஜீவ் சந்திர் சேகர் ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.

பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவின் இந்த குற்றச்சாட்டுகளை ஹிராநந்தனி குழுமம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து இருக்கிறது. அரசியல் என்னுடம் வியாபாரத்தில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என குறிப்பிட்டு இருக்கிறது. இந்த நிலையில் தன் மீது பாஜக எம்பி நிஷிகாந்த் துபே சுமத்திய குற்றச்சாட்டுகளை மஹுவா மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார். அடிப்படை ஆதாரங்கள் இன்றி அவதூறு பரப்பும் நோக்கில் குற்றச்சாட்டுகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, ஜெய் ஆனந்த் தெஹத்ராய் ஆகியோருக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில், "தங்களின் அரசியல் பழிவாங்கலுக்கான எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி என்னுடைய நற்பெயரை கெடுக்கும் விதமாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. மஹுவா மொய்த்ரா - நிஷிகாந்த் துபே இடையே பல்வேறு தருணங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு உள்ளன. பாஜக எம்பி துபே தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்ட கல்வி தகுதிகளின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்த வேண்டும் என கடந்த மார்ச் மாதம் தெரிவித்து இருந்தார். எனவே அவர் மீது பழிவாங்கும் நோக்கில் குற்றம்சாட்டி உள்ளனர்." என வழக்கறிஞர் குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+