விமானம் மலாக்கா பகுதியில் மாயமாகவில்லை: குழப்பும் மலேசிய விமானப்படை!
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம், சீனா செல்லாமல் வழி மாறி மலாக்கா வழியில் கடைசியாக தென்பட்டது என்றத் தகவலை மலேசிய விமானப் படை அதிகாரி மறுத்துள்ளார்.
கடந்த வாரம் 7ம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் மாயமானது. தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோதுதான் இந்த விமானம் ரேடார் தொடர்பை இழந்தது என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

அடுத்து இந்த விமானம், ரேடார் திரையில் இருந்து மறைவதற்கு முன்பாக பீஜிங் செல்வதற்கான திட்டமிட்ட பாதையிலிருந்து விலகி, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியதற்கான சுவடுகள் ரேடாரில் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியானது.
அதன் தொடர்ச்சியாக, ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பாக அந்த விமானம், மலேசியாவின் கிழக்கு கடலோர நகரான கொட்டா பாருவுக்கும், வியட்நாமின் தெற்கு முனைக்கும் இடையே 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்ததாக தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக இந்த விமானம், மலாய் தீபகற்பத்துக்கும், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையே சுமார் 805 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள மலாக்கா ஜலசந்திக்கு மேலே சென்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் வியட்நாமும் தனது எல்லைக்குட்பட்ட வனப்பகுதியை அலசி வருகிறது.
மலேசிய ராணுவ அதிகாரி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அத்தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரியே மறுத்துள்ளார். தான் அவ்வாறு குறிப்பிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்திய கப்பற்படை உட்பட பல நாடுகளின் படைகள் மாயமான விமானத்தை தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர். மாயமான விமானம் கடத்தப்பட்டதா அல்லது விபத்தில் சிக்கியதா என்பது இன்னும் தெளிவாகாத நிலையில் தொடர்ந்து இது தொடர்பாக முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வெளியாவது அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications