OMG! கால்சென்டர் பெண் பலாத்கார அதிர்வு அடங்கும் முன்பு, பெங்களூரில் ஆண் பி.பி.ஓ ஊழியர் பலாத்காரம்
பெங்களூர்: கால்சென்டர் பெண் ஊழியர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தின் வடு ஆறும் முன்பு பெங்களூர் பி.பி.ஓ ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது ஒரு ஆண் என்பதுதான் விஷயம்.
பெங்களூரில் ஓடும் வேனில் கால்சென்டர் பெண் ஊழியர் பலாத்காரம் செய்யப்பட்டதும், அது தொடர்பாக இரு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், ஆண் பிபிஓ ஊழியர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக, தாமதமாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வழி மறித்த கார்
மைக்கோ லேஅவுட் பகுதியிலுள்ள ஒரு பி.பி.ஓவில் பணியாற்றும் இரு ஆண்கள், அந்த நிறுவனத்தின் பிக்-அப் காரில் கடந்த மாதம் 29ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் பயணித்துக்கொண்டிருந்தனர். குறுக்கு சந்து ஒன்றில், எதிரே ஒரு கார் வந்து இந்த காரை வழிமறித்து நிறுத்தியுள்ளது.

அத்துமீறல்
எதிர் காரில் இருந்த இருவர், திடீரென கீழே இறங்கி, பி.பி.ஓ காருக்குள் வந்து ஏறியுள்ளனர். வண்டியை ஏடிஎம் அருகே ஒட்டிச்செல்லுமாறு மிரட்டியுள்ளனர். பி.பி.ஓ டிரைவரும் அதேபோல செய்துள்ளார். ஏடிஎம்மில், பி.பி.ஓ ஊழியர் இருவரும் பணத்தை எடுத்துதருமாறு மிரட்டப்பட்டனர். ஆனால் அக்கவுண்டில் பணமில்லை என்று பதில் வந்தது.

பலாத்காரம்
கோபமடைந்த கொள்ளையர்கள், அந்த காரை, ஜேபிநகர், ராகிகுட்டா பகுதிக்கு ஓட்டிச்செல்ல கூறியுள்ளனர். வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு, பி.பி.ஓ ஊழியர்கள் இருவர் மற்றும் அதன் டிரைவரை நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர், அதில் ஒருவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்பிறகு அவர்கள் தப்பிவிட்டனர்.

அதிரடி கைது
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், இச்செயலில் ஈடுபட்ட கிரண் (29) மற்றும் சதீஷ் (25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது செக்ஷன் 377 என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கைக்கு மாறாக, ஆண், பெண், விலங்குகளுடன் உடலுறவில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க இந்த சட்டத்தில் இடமுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications