நம்ம சண்டைய பிறகு பார்த்துக்கலாம்.. இப்போ அவங்கள உள்ள விடக்கூடாது.. இடதுசாரிகளுக்கு மம்தா அழைப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலத்தில் பாஜக நுழைவதைத் தடுக்க இடதுசாரி வாக்காளர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாநிலத்தில் பரவலாக அதிருப்தி வாக்குகள் உள்ளன. அவற்றை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக் கொள்ள பாஜக முயல்கிறது.

இடதுசாரிகளுக்கு நன்றி
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் பாஜக நுழைவதைத் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என்றார். இடதுசாரி நண்பர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பிரசாரத்தை முன்னெடுத்ததற்கு நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.

எங்களுக்கு வாக்களியுங்கள்
அதேநேரம் இடதுசாரிகளால் இந்தத் தேர்தலில் வெல்ல முடியாது என்பதால் அக்கட்சிக்கு வாக்களித்து வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்கக் கூடாது என்றும் இது பாஜகவுக்கு ஆதரவாகப் போய்விடும் என்றும் அவர் கூறினார். இதன் காரணமாக இடதுசாரி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் தங்கள் வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜகவை உள்ளே விடக்கூடாது
மேற்கு வங்கத்தைப் பிளவுபடுத்தவும், இங்கு நிலவும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கவும் விரும்பும் சில அந்நியர்களின் அச்சுறுத்தலை வங்கம் இப்போது கண்டிருக்கிறது. இந்த அச்சுறுத்தலைத் தவிர்க்க வேண்டியது அவசியம். வங்காளத்தின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து சமூகங்களுக்கும் ஆதரவாக நிற்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன் என்றும் மம்தா பானர்ஜி பேசினார்.

அரசியல் வைரஸ்
மேலும், வங்காளத்தின் மகள் என்பதால் தனது முழு வாழ்க்கையையும் மாநிலத்திலுள்ள பொது மக்களின் நலனுக்காக அர்ப்பணித்துள்ளதாகவும் எப்போதும் இந்த வங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் கடன்பட்டிருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். பாஜகவை ஒரு அரசியல் வைரஸ் என்று விமர்சித்த அவர், மாநிலத்திலுள்ள சுதந்திரமான அமைப்புகளை பாஜக அழித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இடதுசாரிகள் மறுப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல திரணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் பாஜக மாநிலத்தில் நுழைவதைத் தடுக்க இடதுசாரிகள் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இந்த கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்துள்ள இடதுசாரி தலைவர்கள் மாநிலத்தில் பாஜக வளர காரணமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாடுகள் தான் என்று விமர்சித்துள்ளனர்.
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications