For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மம்தாவின் செருப்பு சீனாவில் தயாரிக்கப்பட்டது: 'மேட் இன் இந்தியா'வாக மாற்ற ராகுல் அழைப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அணிந்துள்ள செருப்பு சீனாவில் தயாரிக்கப்பட்டது, அதை நாம் இந்தியாவில் தயாரித்ததாக மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தின்போது. மம்தா பானர்ஜியின் செருப்பு குறித்து ராகுல்காந்தி, பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இருதினங்களுக்கு முன்பு மே.வங்கத்தின் காடல் நாடாளுமன்ற தொகுதி நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி,

Mamata's slippers have 'Made in China' tag, says Rahul

மம்தா பானர்ஜி விலைகுறைந்த செருப்புதான் அணிகிறார். ஆனால் அவர் அணியும் செருப்பில் 'மேட் இன் சீனா' என்ற வாசகங்கள்தான் உள்ளன. இதை நாம் 'மேட் இன் இந்தியா' என்று மாற்ற வேண்டும். ஏழைகளை பற்றி மம்தா அதிகம் பேசுகிறார். ஆனால் ஏழைகள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மத்திய அரசிடமிருந்து மேற்கு வங்க அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மக்களை சென்றடையவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையில் ஈடுபடுகிறது. நீங்கள் வேறு எந்த கட்சியின் தொண்டராகவும் இருந்தால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்படுவீர்கள். திரிணாமுல் காங்கிரசுடன், கூட்டணி வைத்திருந்தபோது மேற்கு வங்கத்தில் அவர்கள் மாற்றம் கொண்டுவருவார்கள் என்று காங்கிரஸ் நம்பியது. ஆனால் சிகப்பு கொடிக்கு பதில் பச்சைக் கொடி பறக்கிறதே தவிர கம்யூனிஸ்டுகளைப்போலத்தான் திரிணாமுல் காங்கிரசும் ஆட்சி செய்கிறது.

சாரதா சிட்பண்ட் மோசடியில் 20 லட்சம் மக்கள் தங்களது பணத்தை இழந்துள்ளனர். மம்தா பெரிதாக பேசுகிறாரே தவிர அவர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றார். ராகுல்காந்தி போகுமிடமெல்லாம் இளைஞர்கள் அணியும், டி-சர்ட் மற்றும் கைக்கடிகாரத்தை சுட்டிக்காட்டி அதை உங்கள் ஊரில் தயாரிக்க வேண்டும் என்று பேசிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Congress vice-president Rahul Gandhi, hit out at West Bengal chief minister Mamata Banerjee at a rally in the state. He said Mamata wore slippers made with the Made in China tag. "The slippers which Mamata-ji wears has Made in China written on it. We want that to change it to Made in India," he said in Ghatal Lok Sabha constituency in West Bengal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X