அதீத அழகு.. விட்டுப் போய்டுவாளோ.. மனசெல்லாம் சந்தேகம் பயம்.. வெட்டிக் கொன்ற காதலன்
காதலி தன்னை விட்டு போய்விடுவாளோ என்ற சந்தேகத்தில் தன்னுடன் வாழ்ந்த பெண்ணை வெட்டிக்கொலை செய்திருக்கிறான். நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் முகம் வெட்டி சிதைக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணின் சடலத்தை மீட்ட ப
நாக்பூர்: அழகான காதலி தன்னை விட்டு போய் விடுவாளோ என்ற சந்தேகத்தில் லிவ் இன் வாழ்க்கை நடத்திய பெண்ணை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்து தேசிய நெடுஞ்சாலையில் வீசி விட்டு சென்றிருக்கிறான்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் குஷி பரிகார் என்று தெரியவந்தது.

ஜெக்தீத் என்பவர் குஷியை தத்தெடுத்து வளர்த்து வந்தார். கல்லூரியில் படித்துக்கொண்டே மாடலாகவும் இருக்கிறார். ரேம்ப் ஷோக்களில் பங்கேற்றிருக்கிறார் குஷி. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆகவும் இருக்கிறார் குஷி.
20 வயதான குஷிக்கு அஷ்ரப் ஷேக் என்பவர் மேல் காதல். வீட்டை விட்டு வெளியேறி கிட்டிகாதன் பகுதியில் வசித்து வருகின்றனர். குஷியின் கொலையில் அவரது காதலன் அஷ்ரப் ஷேக்கிற்கு சம்பந்தம் இருக்கலாமோ என்ற சந்தேகம் இருக்கவே, போலீஸ் விசாரித்தனர். முதலில் மறுத்த அவன், முன்னுக்குப் பின் முரணாக பேசியதில் போலீசிற்கு சந்தேகம் அதிகரித்தது.
தங்கள் பாணியில் விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தன்னுடன் லிவ் இன் வாழ்க்கை நடத்தினாலும் குஷியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தது. பார்ட்டிக்கு செல்வதில் தொடங்கி, செல்போனில் சாட்டிங் செய்வது வரை அவரது நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.
அழகான என் காதலி என்னை விட்டு போய் விடுவாளோ என்று அஞ்சினேன்.
வெள்ளிக்கிழமை இரவு வீக் எண்ட் பார்ட்டிக்கு போனோம். இருவரும் மது குடித்தோம். அவள் பிற ஆண்களுடன் பேசியதை பார்த்து எனக்கு கோபம் வந்தது. காரில் வரும் போது சண்டை போட்டேன். அவளும் என்னை திட்டினாள் எனக்கு கோபம் வந்தது. காரில் மண்வெட்டி வைத்திருந்தேன் முகத்தில் ஒரே போடாக போட்டு கொலை செய்தேன். உடலை சாலை ஓர புதரில் வீசி விட்டு சென்றேன் என்று கூறினான்.
ஜூலை 12ஆம் தேதி நள்ளிரவில் இந்த கொலை நடந்துள்ளது. நாக்பூர் புறநகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அஷ்ரப் ஷேக் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவனை கைது செய்துள்ளனர். அழகான ஒரு பெண்ணின் வாழ்க்கை சந்தேகத்தினால் சிதைந்து போனதுதான் சோகம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications