பசுவை பலாத்காரம் செய்த காம கொடூரன்.. மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் பசுவிடம் மர்ம நபர் இயற்கைக்கு மாறாக பாலியல் உறவு கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள தீன்தயாள் நகரில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில் பொறுத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்து இருக்கிறது.

அந்த காட்சியில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பசுவுடன் மர்ம நபர் ஒருவர் இயற்கைக்கு மாறான உறவு கொண்டு இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை கண்ட ராஷ்டிரிய கௌரக்‌ஷா வாஹினி என்ற பசு பாதுகாப்பு அமைப்பின் மண்டல தலைவர் நிர்பாத் சிங் தோமர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்.

Man booked by police for unusal sex with Cow in Madhya Pradesh

அந்த புகாரின் அடிப்படையில் இயற்கைக்கு மாறாக நடந்துகொண்டதாக கூறி மர்ம நபர் மீது 377 வது சட்டப் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பசுவிடம் தகாத உறவில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குற்றவாளி யார் என்று கண்டறியும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளார்கள்.

சம்பந்தப்பட்ட நபர் பிடிபட்டால் சட்டப்படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எஸ்.பி. ரவி பதோரியா தெரிவித்து உள்ளார். மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், அரியானா, பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட இந்தியாவின் வட மற்றும் மத்திய மாநிலங்களில் பசுவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளன.

அந்தந்த மாநில அரசுகளும் பசுவை பாதுகாக்க பல்வேறு சட்டங்களையும், பசுவதை தடை சட்டங்களையும் வைத்து உள்ளன. பசுவை கடத்தியதாகவும், மாட்டிறைச்சி வைத்திருப்பதாகவும் கூறி பல அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டும் உள்ளார்கள். ஆனால், அதே மாநிலங்களில்தான் பசுக்கள் மற்றும் கால்நடைகள் இயற்கைக்கு மாறாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதும் அதிகம் உள்ளதை அடுத்தடுத்து வெளியாகும் ஊடக செய்திகள் காட்டுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+