"வெந்துபோன" உறுப்பு.. மிளகாய் தூளை திணித்து.. இவரெல்லாம் ஒரு மனிதரா? நடுங்குதே.. காரணம் என்ன தெரியுமா
காந்திநகர் : குஜராத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான குற்றவாளியை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது கைதாகி உள்ளார்.
வடமாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறை குற்றங்களும், பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாகவும் மாறி கொண்டிருக்கிறது.

குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு கணக்கெடுப்பும் சொல்கிறது... குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், அநீதிகள் அதிக அளவில் காணப்படுவதாக இருப்பதாக அறிக்கையில் கூறப்படுகிறது..
எதிர்க்கட்சிகள்: இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியும் விமர்சித்து வருகிறது.. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், இந்த விவகாரங்களை எல்லாம் எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் என்றும் தெரிகிறது. இந்நிலையில், சூரத்தில் ஒரு பயங்கரம் நடந்துள்ளது.. சூரத்தை சேர்ந்தவர் நிகுஞ்ச் குமார் அம்ரித் பாய் படேல்.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால், இவரது மனைவி, சொந்த கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்.. படேல் மட்டும் பணி நிமித்தமாக, சூரத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்த நேரத்தில் இளம்பெண் ஒருவரது அறிமுகம் படேலுக்கு கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், அந்த பெண்ணை காதலித்துள்ளார்.. இருவரும் அடிக்கடி வெளியே சென்று தங்கள் காதலை கொண்டாடியுள்ளனர்.. ஆனால்அந்த பெண்ணிடம், தனக்கு திருமணமாகி மனைவி இருப்பதையே மறைத்துவிட்டார். ஒருகட்டத்தில் படேல், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற உண்மை அந்த பெண்ணுக்கு தெரிய வந்தது.
தகராறு: இது அவர்களுக்குள் தகராறாக உருவெடுத்தது.. விஷயம் தெரிந்துவிட்டதால், படேலிடம் இருந்து விலகி செல்ல அந்த பெண் முடிவெடுத்தார்.. அதனால், அவருடன் பேசாமல் இருந்துள்ளார். தொடர்ந்து நிகுஞ்ச் குமார் போன் செய்தாலும், அவரை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிகுஞ்ச் குமார் அந்த பெண்ணை பழிவாங்க எண்ணியுள்ளார்.

சரமாரி தாக்குதல்: இதையடுத்து சம்பவத்தன்று தனியாக சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை, கடத்தி தனியாக ரூம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளார். உச்சக்கட்ட கோபத்தில் இருந்த படேல், கேபிள் வயரால் அந்த பெண்ணை சரமாரியாக அடித்துள்ளார்.. பிறகு, பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்..
அப்போது, அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் மிளகாய் தூளையும் திணித்துள்ளார்.. அத்துடன், இந்த சம்பவங்களை எல்லாம் போட்டோ, வீடியோவாகவும் செல்போனில் எடுத்து வைத்துக் கொண்டார்.. அவைகளை சோஷியல் மீடியாவில் வெளியிட போவதாகவும் மிரட்டியிருக்கிறார்.
இதையடுத்து, அந்த பெண் எரிச்சல் தாங்காமல் கதறி அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.. இந்த விஷயம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.. அப்போது, நடந்த விஷயங்களை வாக்குமூலமாக தந்ததுடன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, சம்பந்தப்பட்ட நபர் மீது பெண் புகாரும் தந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் 376 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.. ஆனால், படேல் தப்பியோடிவிட்டார்.. அவரை தீவிரமாக நேற்றுமுதல் தேடிவந்த நிலையில், தற்போது போலீசில் வசமாக சிக்கி உள்ளார்.. அவரை கைது செய்த போலீசார், விசாரணையை தீவிரமாக நடத்தி வருகிறார்கள்.. இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை தந்து வருகிறது..!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications