குடியரசுத் தலைவர் மாளிகை வெடித்துச் சிதறும்: மிரட்டல் போன் அழைப்பால் பரபரப்பு
டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த போன் மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. போனை எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசியவர் குடியரசுத் தலைவர் மாளிகையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் வெடிகுண்டு ஏதாவது உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது. சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதற்கிடையே மிரட்டல் போன் செய்த நபர் டெல்லியில் இருந்து பேசியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
முன்னதாக மாலை 6 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த வேறு ஒருவர் டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸியின் செல்போன் எண்ணை கேட்டுள்ளார். போலீசார் செல்போன் எண்ணை அளிக்க மறுத்ததும் மத்திய டெல்லியில் சில இடங்களில் குண்டு வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த அழைப்பை அடுத்து மத்திய டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அடுத்தடுத்து வந்த இரண்டு மிரட்டல் அழைப்புகளால் போலீசார் படாதபாடு பட்டுவிட்டனர்.
6 மணிக்கு போன் செய்தவர் டெல்லியில் உள்ள சகர்பூரில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் அவரிடம் போன் மூலம் விசாரித்தனர். மனைவியுடன் சண்டை போட்ட கோபத்தில் அவ்வாறு போன் செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை விசாரணைக்கு அழைத்து வர போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications