காதலிக்க மறுப்பு... இளம்பெண்ணின் கை விரல்களைத் துண்டித்த இளைஞர்
பெங்களூரு: காதலிக்க மறுத்த பெண்ணின் கை விரல்களை துண்டித்த இளைஞரை மாண்டியா போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பெஸகரஹள்ளியை சேர்ந்தவர் ரவி (25). இவர் கடந்த ஓராண்டாக, அதே கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவரைக் காதலித்துவந்துள்ளார். ஆனால், அப்பெண் ரவியின் காதலை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் தனிமையில் சந்தித்துப் பேச அப்பெண்ணை ரவி அழைத்துள்ளார். ஆனால், ரவி அழைத்த இடத்திற்கு அப்பெண் செல்லவில்லை. இதனால் அப்பெண் மீது ரவி ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ரவி நேற்று முன்தினம் அப்பெண்ணின் வீட்டிற்கு எதிரே காத்திருந்துள்ளார். அப்போது அப்பெண் கடைக்கு செல்வதற்காக வெளியில் வந்துள்ளார். வழியில் அவரை இடைமறித்த ரவி, அப்பெண்ணின் வலது கை விரல்களைக் கத்தியால் வெட்டித் துண்டித்துள்ளார்.
வலியால் அலறித் துடித்த அப்பெண்ணை சிகிச்சைக்காக மாண்டியா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவியைக் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணின் கை விரல்களை இளைஞர் துண்டித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications