பொய் சொன்ன மகனை தூக்கி போட்டு மிதித்த கொடூர தந்தை... ரசித்தபடி வீடியோ எடுத்த தாய்!
பொய் கூறியதற்காக சிறுவனை தூக்கி போட்டு மிதிக்கும் தந்தையின் செயலை கண்டு கொள்ளாமல் ரசித்தபடியே அவனது தாய் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Recommended Video

பெங்களூரு: பொய் கூறியதற்காக சிறுவனை அவனது தந்தை தூக்கி போட்டு மிதிக்கும் காட்சிகள் 3 மாதங்கள் கழித்து தற்போது வெளியே வந்துள்ளது. இதையடுத்து அந்த தந்தை கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் கெங்கேரி குளோபல் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (37). இவரது மனைவி ஷில்பா. இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். மகேந்திரனின் செல்போன் பழுதடைந்து விட்டதால் கடையில் கொடுக்கப்பட்டது.
அந்த போன் சரியாக வேலை செய்கிறதா என்று பார்ப்பதற்காக கடைக்காரர் அதில் உள்ள ஒரு வீடியோவை ப்ளே செய்து பார்த்துள்ளார். அதை பார்த்தவருக்கு தூக்கி வாரி போட்டது.

சார்ஜர் மூலம் தாக்குதல்
அந்த வீடியோவில் செல்போன் பழுது பார்க்க கொடுத்த மகேந்திரன் தனது 10 வயது சிறுவன் பொய் கூறியதற்காக முதலில் மொபைல் சார்ஜர் மூலம் தாக்கினார். பின்னர் பெல்ட்டாலும் கொடூரமாக தாக்குதல் நடத்துகிறார்.

மல்யுத்த போட்டி
இதையடுத்து பொய் சொல்லுவியா பொய் சொல்லுவியா என கேட்டு அந்த பிஞ்சு சிறுவனை கண்டபடி தூக்கி கட்டிலில் போடுகிறார். இதை பார்ப்பதற்கு மல்யுத்த போட்டியில் சக வீரரை தூக்கி போட்டு அடிக்கும் காட்சி போல் உள்ளது.

விடாமல் தாக்குதல்
அந்த சிறுவன் இனிமேல் பொய் கூறமாட்டேன் பொய் கூற மாட்டேன் என்று கதறி கொண்டே கூறியும் விடாமல் இழுத்து போட்டு மிதிக்கிறார் மகேந்திரன். இந்த செயலை தடுக்காமல் பொய் சொல்கிறான் பொய் சொல்கிறான் என்று மகேந்திரனின் கோபத்தை ஏற்றிவிட்டு வீடியோ எடுத்தது தாய் ஷில்பா.

தந்தை கைது
இதை பார்த்த கடைக்காரர் நேராக காவல் நிலையத்தில் கொண்டு சென்று கொடுத்துவிட்டார். இதையடுத்து மகேந்திரனை போலீஸார் கைது செய்தனர். தாய் ஷில்பா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுமார் 3 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த வீடியோ செல்போன் பழுதானதால் வெளியே வந்தது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications