ராகுலை எப்படி புகழ்ந்து பேசலாம்? மகன் வருணுக்கு மேனகா அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

அமேதி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதிப் பணிகளை புகழ்ந்த மகன் வருண் காந்திக்கு அப்படியெல்லாம் பேசக்கூடாது என அவரது தயார் மேனகா காந்தி அட்வைஸ் செய்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக வருண்காந்தி களம் இறங்கியுள்ளார். சுல்தான்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், ராகுல் காந்தியை பாராட்டிப் பேசினார்.

Maneka Gandhi slams son Varun for praising Rahul

இதற்கு ராகுல் காந்தியும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளரை எப்படி பாஜக வேட்பாளர் பாராட்டலாம் என்று சர்ச்சை உருவானது.

இதனால் வருண் காந்தி நான் அப்படியெல்லாம் பாராட்டவில்லை என்று பல்டியடித்தார். இது குறித்து வருணின் தாயார் மேனகா வருத்தமும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளார்.

":எதையும் நீ பார்க்காமல் கருத்து கூற வேண்டாம் என்று வருண்காந்தியிடம் நான் கூறியுள்ளேன். வருண் கூறியதில் உண்மை இல்லை. அமேதியில் எந்த ஒரு அடிப்படை பணிகளும் செய்யப்படவில்லை" என்கிறார் மேனகா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+