மங்களூர் வெறியாட்டம்: இந்து பெண்ணுடன் பேசியதற்காக இஸ்லாமிய இளைஞரை கட்டி வைத்து உதைத்த பயங்கரம்!
மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில் பொது இடத்தில் இந்து பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த ஒரே காரணத்துக்காக இஸ்லாமிய இளைஞர் ஒருவரை இந்துமதவெறி அமைப்பினர் கட்டிவைத்து அடித்து உதைத்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மங்களூருவில் உள்ள கடை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வரும் இஸ்லாமிய இளைஞர், அதே கடையில் விற்பனையாளராக பணிபுரியும் இந்து பெண்ணுடன் அருகில் இருந்த ஏ.டி.எம். க்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கண்ட பஜ்ரங்தளம் அமைப்பினர் அந்த இளைஞரை பிடித்து மரத்தில் கட்டிவைத்து பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதைத் தடுக்க முயன்ற அப்பெண்ணையும் அவர்கள் அடித்து விரட்டி உள்ளனர்.
இந்த காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று அந்த இளைஞரை மீட்டனர் போலீசார்.
இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்ட 30 வெறியர்களில் 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்துத்துவா கும்பலின் இந்த வெறியாட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications