உன்னை உதைப்பேன்.. பத்திரிகையாளரை பகிரங்கமாக மிரட்டிய மணிசங்கர் அய்யர்
சிம்லா: தம்மிடம் சரமாரியாக கேள்விகளைக் கேட்ட பத்திரிகையாளரை உதைப்பேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் மிரட்டியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
2017-ம் ஆண்டு பிரதமர் மோடியை 'நீச் ஆத்மி' (இழிபிறவி) என விமர்சித்ததால் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் மணிசங்கர் அய்யர். பின்னர் அவர் மன்னிப்புக் கேட்டார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரங்களை வைத்து பார்க்கும் போது தாம் நீச் ஆத்மி என அவரை குறிப்பிட்டது எவ்வளவு சரியாக இருக்கிறது என பெருமிதப்பட்டார். இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே சிம்லாவில் செய்தியாளர்களை நேற்று மணிசங்கர் அய்யர் சந்தித்தார். அப்போது அவரது நீச் ஆத்மி கட்டுரை குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் கொதிப்படைந்த மணிசங்கர் அய்யர், பத்திரிகையாளரை பார்த்து உதைப்பேன் என மிரட்டினார். மேலும் பிரதமர் மோடியை ஒரு கோழை என காட்டமாக விமர்சித்தார்.
தொடர்ந்தும் தம்மிடம் கேள்வி கேட்க முயன்ற பத்திரிகையாளர்களை, என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் எனவும் எச்சரித்தார். மணிசங்கர் அய்யரின் இந்த நடவடிக்கை சர்ச்சையாகி உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications