Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட்டியூண்டு மணிப்பூரில் திணறுகிறதா பாஜக.. ரவுண்டு கட்டி அடிக்கிறதா காங்கிரஸ்.. கள நிலவரம் என்ன?

மணிப்பூர் தேர்தலில் இந்த முறை காங்கிரஸ் கட்சி வெல்லுமா என்ற எதிர்பாப்பு ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மற்ற 4 மாநிலங்களின் தேர்தல் களத்தைவிட மணிப்பூர் மாநிலத்தில், தேர்தல் களம் படுசூடாக தகித்து கொண்டிருக்கிறதாம்.. காரணம், பாஜகவும், காங்கிரஸும் நீயா? நானா? என்ற சமதள போட்டியில் உள்ளதுதான்..!

மணிப்பூர் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.. கடந்த முறையை போலவே, இந்த முறையும் தனித்து களமிறங்கி ஆட்சியை பிடிக்க பாஜக பிளான் செய்து வருகிறது.. ஆனால், மணிப்பூரை விடப்போவதில்லை என்று காங்கிரஸ் கங்கணம் கட்டிக் கொண்டு, கோதாவில் குதித்துள்ளது.

இங்கு மொத்தமாக இருக்கும் 60 தொகுதிகளில் 31 சீட்டை பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது.. 2017-ல் பாஜக வெற்றி பெற்ற நிலையில், இந்த முறையாவது பெரும்பான்மை வெற்றி கிடைக்க வேண்டும் என்று கணக்கு போட்டு வருகிறது.

 கூட்டணிகள்

கூட்டணிகள்

கடந்த முறை ஜஸ்ட் பாஸ் ஆகி, கூட்டணி ஆதரவுடன் மணிப்பூரை தன் பிடியில் வைத்து கொண்டது பாஜக.. அதாவது மாநிலக் கட்சிகளான நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளும் வெற்றி பெற்றிருந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்து கொண்டன.. காங்கிரஸ் நிறைய இடங்களில் வெற்றி பெற்றாலும், கூட்டணி கொண்ட ஒரே காரணத்தினாலேயே பாஜக நூலிழையில் அங்கு தப்பியது.

 லோக்ஜனசக்தி

லோக்ஜனசக்தி

இப்போது பாஜகவுக்கு உள்ள பலம் என்னவென்றால், 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள்.. அதேபோல, திரிணாமுல் காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 2 பேர் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள்.. இதுபோக வேறு சிலரும் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவுவார்கள் என்று கணக்கு போடுகிறது.. அதனால்தான் இந்த முறை தனித்து போட்டி என்பதில் பாஜக தெம்பாக இருக்கிறது...

 பாஜக

பாஜக

இதெல்லாம் பாஜகவுக்கு பிளஸ் என்றாலும், மாநில பாஜகவுக்குள் அதிருப்தி வெடித்துள்ளது மிகப்பெரிய மைனஸாக பார்க்கப்படுகிறது.. குறிப்பாக, முதல்வர் பிரேன் சிங்குக்கு எதிரான மனநிலையில் சில பாஜக மூத்த தலைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.. அவருக்கு எதிராக குழி பறிக்க பலரும் காத்திருக்கிறார்கள்.. இவர்களது சண்டையில் மறுபடியும் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சிகள் பாழாகி விடக் கூடாது என்று பாஜக கவனமாக இருக்கிறது... அதனால், உட்பூசலை தீர்த்து கொண்டு பாஜக தன்னை எப்படி பலப்படுத்தி மேலே வருமோ என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

 உட்கட்சி பூசல்

உட்கட்சி பூசல்

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, வழக்கம்போல், தன்னுடைய பலத்தை விட்டுத்தராமல் இப்போதும் அதே கெத்தில் உள்ளது.. 15 வருடங்களாகவே தன்பிடியில் மணிப்பூரை வைத்திருந்தது காங்கிரஸ்.. ஆட்சியில் தற்போது இல்லாவிட்டாலும், அக்கட்சியின் வீர்யம் இன்னும் குறையவில்லை.. அதற்கு முழு முதற் காரணம் மாநில காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய மூத்த தலைவரான ஒக்ராம் இபோபி சிங் என்பவர்தான்.. இப்போதும் அவரை நம்பிதான் கட்சி மேலிடம் உள்ளது..

செல்வாக்கு

செல்வாக்கு

இந்தமுறை, இந்த 5 வருடத்தில் மாநில பாஜக மீதான அதிருப்திகளை வைத்து பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.. மேலும் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை போட்டியிட வைத்தால், அது பாஜகவுக்கு டஃப் தரும் வகையில் களத்தில் பலமான போட்டி ஏற்படும் என்றும் நம்புகிறது.. இதுபோக, பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல்களை வைத்தும் பிரச்சாரத்தை நடத்தினால், அது தங்களுக்கு உதவும் என்றும் மாநில காங்கிரஸ் கணக்கு போடுகிறது.

மணிப்பூர்

மணிப்பூர்

இப்போது விஷயம் என்னவென்றால், ஆளும் பாஜகவும், காங்கிரசும் மணிப்பூரில் கிட்டத்தட்ட சம பலத்துடன் உள்ளதாம்.. உபியில் காங்கிரஸை தள்ளிவிட்டு சமாஜ்வாடி மேலே வந்துவிட்டது.. அதேபோல பஞ்சாப்பில் காங்கிரஸை தள்ளிவிட்டு, ஆம் ஆத்மி மேலே வந்துவிட்டது.. இப்படிப்பட்ட சூழலில் மணிப்பூரில் மட்டும் பாஜகவுக்கு ஈடாக சமபலத்துடன் காங்கிரஸ் திகழ்ந்து வருவது, தொண்டர்களுக்கு ஆறுதலையும் தெம்பையும் ஏற்படுத்தி வருகிறது..

ஆதரவு

ஆதரவு

ஒருவேளை இரு கட்சிகளுக்குமே சம ஆதரவு கிடைத்துவிட்டால், மறுபடியும்கடந்த முறையை போலவே, இந்த முறையும் யாருடனாவது கூட்டணி ஆட்சியை பிடிக்க நேரிடுமா? அல்லது தேர்தல் சமயத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், இப்போதைய இந்த கள நிலவரம் மாறுபடுமா? அல்லது கடைசி நேரத்தில் பாஜக ஏதாவது செய்து, தன்னுடைய வலிமையை பெருக்கி கொள்ளுமா? என்பதெல்லாம் தெரியவில்லை.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+