3 முறை மிஸ்ஸிங்.. நிர்வாண ஊர்வலத்தை மறைக்க முயன்ற மணிப்பூர் அதிகாரிகள்? தேசிய மகளிர் ஆணையம் பகீர்
இம்பால்: மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 3 மாதத்தில் 3 முறை தேசிய மகளிர் ஆணையம் தொடர்பு கொண்டும் மணிப்பூர் மாநில நிர்வாகம் பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்துள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூரில் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். மைத்தேயி மக்கள் தங்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க கூறி வருகின்றனர். இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த மே மாதம் 3ம் தேதி இருதரப்புக்கும் இடையே மோதல் உருவாகி வன்முறை வெடித்தது.

இதனால் மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் நேற்று அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியானது. அதாவது மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளுடன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த 2 பழங்குடியின பெண்களை மைத்தேயி மக்கள் தான் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய, மாநிலத்தை ஆளும் பாஜக அரசுகளை எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல அமைப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் மணிப்பூர் பிரச்சனை பற்றி விவாதிக்க இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில் அது ஏற்கப்படவில்லை. இதையடுத்து நேற்று, இன்று என 2 நாட்களும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. மேலும் சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க மணிப்பூரில் வன்முறைக்கு நடுவே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் 3 முறை விளக்கம் கேட்டும் மணிப்பூர் மாநில நிர்வாகத்தில் இருந்து எந்த பதிலும் அளிக்காமல் இருந்த அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு ஜூன் 12ல் புகார் சென்றுள்ளது. இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் மணிப்பூர் அதிகாரிகளுக்கு தேசிய மகளிர் ஆணையம் ஜூன் 19, மே 18, மே 29 ஆகிய தேதிகளில் கடிதங்கள் எழுதின. ஆனால் அதற்கு அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்ற விபரமும் வெளியாகி உள்ளது. இதனால் இந்த விஷயத்தை மறைக்க மணிப்பூர் அதிகாரிகள் முயன்றார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா கூறுகையில், ‛‛மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக எங்களுக்கு புகார் வந்தது. ஆனால் அது மணிப்பூரில் இருந்து வரவில்லை. இதனால் வீடியோவின்(பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ) நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டி இருந்தது.
இதற்காக மணிப்பூரில் அதிகாரிகளை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இருப்பினும் நாங்கள் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினோம். இதற்கிடையே வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 3 முறை மணிப்பூர் மாநிலத்தை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. தற்போது தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணையத்தின் இந்த தகவல் தற்போது பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications