மணிப்பூர்: 2-ம் நாளாக ராகுல் விசிட்!அமைதி திரும்ப நடவடிக்கை தேவை- ஆளுநரை சந்தித்த பின் வலியுறுத்தல்!
இம்பால்: மணிப்பூரில் முகாமிட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று 2-வது நாளாக வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின் அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து மணிப்பூர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக வன்முறைகள் நீடிக்கின்றன. மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையேயான மோதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் அமைதியை திரும்ப செய்ய மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் தரவில்லை. இம்மாநிலத்தில் 50,000க்கும் அதிகமான ராணுவத்தினர் குவிக்கப்பட்ட நிலையில் வன்முறைகள் தொடருகின்றன. மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மக்களை சந்திக்கவில்லை என்பதும் விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் மூத்த காங்கிரஸ் த்அலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் பயணமாக மணிப்பூர் மாநிலத்துக்கு நேற்று சென்றடைந்தார். பாதிக்கப்பட்ட மக்களை அகதிகள் முகாமில் சந்திக்க, சாலை மார்க்கமாக ராகுல் காந்தி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ராகுல் காந்தி வாகனத்தை போலீசார் மறுத்து சாலை மார்க்கமாக செல்ல தடை விதித்தனர். இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நீடித்தது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாகவும் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி சந்தித்து கலந்துரையாடினார். இதன்பின்னர் இம்பால் ஹோட்டல் ஒன்றில் 10 அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டன. இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்

இதனிடையே ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ராகுல் காந்தியால் மணிப்பூரில் அமைதியை கொண்டுவர முடியுமா? அரசியல் லாபத்துக்காக மட்டுமே ராகுல் காந்தி மணிப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது நிலைமையை மேலும் மோசமாக்கக் கூடும் எனவும் பாஜக தலைவர்கள் விமர்சித்தும் வருகின்றனர்.
மேலும் இம்பாலில் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும். அமைதிதான் இங்கே தேவையான ஒன்றாக இருக்கிறது. மணிப்பூர் அகதிகள் முகாம்களை பார்வையிட்டேன். மக்களை சந்தித்தேன். அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications