மணிப்பூரில் மேலும் 3 பேர் சுட்டுக் கொலை! வழக்குகளை விசாரிக்க சிபிஐ சிறப்பு குழு நியமனம்!
இம்பால்: மணிப்பூர் இனமோதல்களில் மேலும் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் இன மோதல்கள் தொடர்பாக விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை சிபிஐ நியமித்துள்ளது.
மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மோதல்கள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக நீடிக்கிறது. இம்மோதல்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள் பரவாமல் இருக்க ஒரு மாத காலமாக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூரில் முகாமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். மணிப்பூரில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தையும் அவர் நடத்தினார். இதனைத் தொடர்ந்து மணிப்பூர் இன வன்முறைகளில் முக்கியமான 6 வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் எனவும் அறிவித்தார் அமித்ஷா.

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பயணத்துக்குப் பின்னரும் தாக்குதல்கள் தொடருகின்றன. பாதுகாப்பு படையினர் மற்றும் மைத்தேயி இனக்குழுவினர் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மணிப்பூரில் நேற்றும் 3 மைத்தேயி இனக்குழுவினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனிடையே வன்முறை வழக்குகளை சிபிஐ விசாரிக்க மாநில அரசும் பரிந்துரைத்தது.
இப்பரிந்துரையை தொடர்ந்து மணிப்பூர் வன்முறை சம்பவங்களை விசாரிக்க சிபிஐ 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. மணிப்பூர் இன வன்முறைகளின் பின்னணியில் உள்ள சதி குறித்தும் இந்த குழு விசாரிக்க உள்ளது. சிபிஐ விசாரணைக் குழுவானது முதல் கட்டமாக 6 வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது.
பிரச்சனை என்ன?: மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் பழங்குடிகள் பட்டியலில் நாகா, குக்கிகள் இருந்து வருகின்றனர். இப்பட்டியலில் மைத்தேயி இன மக்களையும் சேர்க்க முயற்சிகள் நடைபெறுகிறது. இதற்கு குக்கி இனக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மைத்தேயி இனக்குழுவினரை தங்களைப் போல பழங்குடிகள் பட்டியலில் சேர்த்தால் மலைப் பகுதிகளில் தங்களுக்கே உரித்தான நில உரிமை உள்ளிட்டவை பறிபோகும் என்பது குக்கி இனத்தவர் அச்சம். இதனால் மைத்தேயி இனக்குழுவினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications