மணிப்பூர் வன்முறை சட்டம் ஒழுங்கு பிரச்சனைதான்.. அமைதி திரும்பும்: முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதுவும் இல்லை; சட்டம் ஒழுங்கு பிரச்சனைதான்.. அமைதி திரும்ப சற்று காலமாகும் என்று முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 28 நாட்களாக தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. மைத்தேயி இன மக்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்பது குக்கி இன மக்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்திதான் வன்முறைகள் வெடித்துள்ளன. கடந்த ஒரு மாத காலமாக நீடிக்கும் வன்முறையில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்துக்கு அண்மையில் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பயணம் மேற்கொண்டார். மணிப்பூர் மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோரும் மணிப்பூர் சென்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷா 4 நாட்கள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார். முதலில் ஆளுநர், முதல்வர் பைரோன் சிங், அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இன்று பல்வேறு பொதுமக்கள் அமைப்புகளுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
அதேபோல முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானும் மணிப்பூர் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களிடம் அனில் சவுகான் கூறியதாவது: மணிப்பூர் வன்முறை சம்பவங்களில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இல்லை. இது சட்டம் ஒழுங்கு பிரச்சனைதான். இதில் மாநில அரசுக்கு ராணுவம் உதவி வருகிறது.
மணிப்பூரில் ராணுவம் சிறப்பான பணியை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறோம். மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு சற்று காலதாமதமாகும். ஆனால் பிரச்சனை விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கே இரு இனக்குழுக்களிடையேயான பிரச்சனை மட்டும்தான். அதனால் நிலைமை சரியாகும். இவ்வாறு அனில் சவுகான் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக மாநில முதல்வர் பைரோன்சிங் கூறுகையில், மணிப்பூர் வன்முறையில் பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகவும் 40 தீவிரவாதிகள் வெவ்வேறு இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications