மணிப்பூர் வன்முறை: டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை- விளக்கம் தந்த அமித்ஷா!
டெல்லி: மணிப்பூரில் 2 மாதங்களாக நீடிக்கும் வன்முறைகள் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி இன்று தமது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான மோதல்கள் 2 மாதங்களாக நீடிக்கிறது. இம்மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இரு இனக்குழுவினரும் தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூரில் முகாமிட்டு அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார். மத்திய அரசும் அமைதிக் குழுவை அமைத்தது. ஆனாலும் வன்முறை கட்டுக்குள் அடங்காமல் தொடருகிறது. 2 மாதங்களாக மணிப்பூரில் இணையசேவை துண்டிக்கப்பட்டிருப்பதால் அம்மாநிலத்தின் முழுமையான உண்மை நிலவரம் வெளியே தெரியவும் இல்லை.
இந்நிலையில் அண்மையில் மத்திய அமைச்சர் அமித்ஷா, அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திலும் மணிப்பூர் மாநிலத்துக்கு அனைத்து கட்சிக் குழுவை அனுமதிக்க வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. பிரதமர் மோடி தமது மன்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் கூட மணிப்பூர் பற்றி எதுவும் குறிப்பிடாதது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரேடியே பெட்டிகள் எரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தற்போது வெளிநாட்டு பயணங்களை நிறைவு செய்து நாடு திரும்பி உள்ளார் பிரதமர் மோடி. டெல்லியில் இன்று தமது வீட்டில் மணிப்பூர் நிலைமை தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை பிரதமர் மோடியிடம் விவரித்தார். முன்னதாக நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது மணிப்பூர் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வது தொடர்பான தனது கவலையை பைரேன் சிங்கிடம் அமித்ஷா பகிர்ந்து கொண்டார் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவித்துள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications