For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலை கிடைக்கவில்லையா?: அப்ப உங்க 'ஃபேஸ்புக் போஸ்ட்', 'ட்வீட்' தான் காரணம்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: வேலை கேட்டு விண்ணப்பிப்போரில் 68 சதவீதம் பேர் நிராகரிக்கப்படுவதற்கு அவர்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கும் கருத்துகள் தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

கெரியர்பில்டர் இந்தியா என்ற வேலைவாய்ப்பு இணையதளம் வேலைக்கு விண்ணப்பிப்போரில் பலர் நிராகரிக்கப்படுவது குறித்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் 1, 200 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

அந்த கருத்துக்கணிப்பின் முடிவின் விவரம் வருமாறு,

சமூக வலைதளங்கள்

சமூக வலைதளங்கள்

59 சதவீத நிறுவனங்கள் சமூக வலைதளங்களில் வேலை கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் குறித்து ஆய்வு செய்கிறது. மேலும் 33 சதவீத நிறுவனங்கள் விரைவில் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளன.

இவர் வேண்டாம்

இவர் வேண்டாம்

68 சதவீத நிறுவனங்கள் வேலை கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ள கருத்துகளை பார்த்து தான் அவர்களை நிராகரிக்கிறது.

கூகுள்

கூகுள்

75 சதவீத நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற பணியாளர்களை தேர்வு செய்ய கூகுளில் அவர்களின் விவரங்களை தேடுகிறதாம்.

குடி

குடி

வேலை கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் சமூக வலைதளங்களில் மது அருந்துவது, போதைப் பொருள் உட்கொள்வது பற்றி கூறுவதும், முன்னாள் முதலாளி அல்லது நிறுவனம் குறித்து அவதூறாக பேசுவதும், மோசமான புகைப்படங்களை வெளியிடுவதும் அவர்கள் நிராகரிக்கப்பட கூறப்படும் காரணங்களில் சில.

வேலை

வேலை

வேலை தேடுபவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கையில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

English summary
Social media has emerged as a major background check tool for employers and nearly 68 per cent of them decide against hiring individuals after finding negative details about them, according to finding of a survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X