சத்தீஸ்கர்ரில் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள்- அதிர்ச்சி தகவல்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் ராக்கெட் லாஞ்சர்கள் மூலமாகவும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாவோயிஸ்டுகளின் இருப்பு அண்மைக்காலமாக கேள்விக்குறியாகி இருந்தது. மாவோயிஸ்டுகளின் வசமுள்ள வனப்பகுதிகளுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்கின்றன.
இதனால் மாவோயிஸ்டுகளுக்கு கடும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 2000 பாதுகாப்பு படையினர் சத்தீஸ்கரின் சுக்மா, பிஜாபூர் மாவட்டங்களின் வனப்பகுதிகளில் கூட்டாக தேடுதல் நடவடிக்கை மேற்கொன்டனர்.

மாவோயிஸ்டுகளுடன் மோதல்
ஜோனகுடா என்ற மாவோயிஸ்டுகளின் முக்கியமான இடத்தை பாதுகாப்பு படை வீரர்கள் நெருங்கினர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் தொடங்கியது.

22 வீரர்கள் வீரமரணம்
இந்த மோதலில் 22 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 31 வீரர்கள் படுகாயமடைந்தனர். இதில் 15 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த சண்டையின் போது மாவோயிஸ்டுகள் இலகு மற்றும் கனரக ஆயுதங்கள், தானியங்கி துப்பாக்கிகளை பயன்படுத்தினர்.

மாவோயிஸ்டுகளின் ராக்கெட் லாஞ்சர்கள்
அத்துடன் ராக்கெட் லாஞ்சர்கள் மூலமாகவும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அதாவது மாவோயிஸ்டுகள் நவீன ஆயுதங்களுடன் வனப்பகுதிகளில் பதுங்கி இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது என்கின்றனர் பாதுகாப்புப் படையினர்.

அமித்ஷா இரங்கல்
இதனிடையே சத்தீஸ்கரில் 22 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலை தொடர்பு கொண்டும் அமித்ஷா பேசினார். அதேபோல் சி.ஆர்.பி.எப். இயக்குநர் குல்தீப்சிங்கை சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்று ஆய்வு செய்யவும் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications