ஜம்மு காஷ்மீர் வெள்ளம்: 200 பேர் பலி! 25,000 பேர் மீட்பு- லட்சக்கணக்கானோர் தவிப்பு!!
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவித்த 25,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் சிக்கியுள்ள லட்சக்கணக்கானோரை மீட்கும் பணியில், இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு "இமாலய சுனாமி' எனப்படும் பலத்த மழை வெள்ளம் ஏற்பட்டதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதுபோன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தற்போது திடீர் மழை, வெள்ளப் பெருக்கு நேரிட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் ஓடும் முக்கிய நதிகள், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

200 பேர் பலி
ஜம்மு-காஷ்மீர் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கைப் பேரழிவுக்கு, இதுவரை 200 பேர் பலியாகி விட்டனர்.

லட்சம் பேர் தவிப்பு
இதுதவிர வெள்ளம் சூழ்ந்திருக்கும் பகுதிகளில், லட்சக்கணக்கானோர் சிக்கித் தவிப்பதால், அவர்களை மீட்கும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் மீட்புப் பணிகளுக்காக கூடுதல் தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர்களை படகுகள், மீட்புச் சாதனங்களுடன் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த மீட்புப் பணியில், இந்திய கடற்படை வீரர்களும் முதல்முறையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

25 ஆயிரம் பேர் மீட்பு
இதுவரை நடைபெற்ற மீட்புப் பணிகளில், 25,000 பேரை இந்திய ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்டுள்ளனர். அவர்களில், ராணுவத்தினர், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 1,400 பேரும் அடங்குவார்கள். மீட்கப்பட்ட அனைவரும், உயரமான பகுதிகளில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

டால் ஏரியில்..
ஸ்ரீநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை மழையின் அளவு குறைந்திருந்தது. இதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சூழ்ந்திருந்த நீரின் அளவும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. எனினும், ஸ்ரீநகரில் "டால்' ஏரியில் வெள்ளத்தின் அளவு அதிகரித்துள்ளது.

45 விமானங்கள்
ஸ்ரீநகரில் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பதற்காக பல இடங்களில் வீடுகளின் கூரைகள் மீதும், வீடுகளின் மேல்தளங்களிலும் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இதையடுத்து அவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில், இந்திய விமானப் படையைச் சேர்ந்த 45 விமானங்களும், ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications