ஈராக் வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! சேவை மையம்- தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈராக் தலைநகர் பாக்தாத் எந்த நேரத்திலும் சதாம் உசேன் ஆதரவு படை வசம் விழுந்துவிடலாம் என்ற நிலையில் இந்தியர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அத்துடன் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் 24 மணி நேர சேவை மையமும் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஈராக்கில் மோதல் நிகழும் பகுதிகளில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பரூதீன் தமது ட்விட்டர் பக்கத்தில், பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகம் 24 மணி சேவை மையத்தை தொடங்கியுள்ளது.

மேலும் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ள [email protected] என்ற முகவரியில் தகவல் தெரிவிக்கலாம். அத்துடன் +964 770 444 4899 and +964 770 484 3247 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+