கணவரின் உடல் மீது படம் எடுத்து உட்கார்ந்த பாம்பு! 10 முறை கடித்த சோகம்! மனைவி போட்ட பலே நாடகம்!
மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காதலனுடன் நெருக்கமாக இருந்ததை கணவர் பார்த்துவிட்டதால் அவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவரது உடல் மீது பாம்பைவிட்டு, பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டை சேர்ந்தவர் அமித் (25). இவருடைய மனைவி ரவிதா. இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அமித், கூலித் தொழிலாளியாக உள்ளார்.

இவர் தினந்தோறும் வேலைக்கு சென்றால் மட்டுமே அவர்களது வீட்டில் அடுப்பெரிக்க முடியும் என்பதுதான் உண்மையான குடும்ப சூழல்! இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி காலை, அமித்தை படுக்கையிலிருந்து எழுப்ப ரவிதா சென்றார்.
அதிர்ச்சி
இதனால் ரவிதா அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் கூச்சல் இட்டதால் அங்கு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அவர் மீது ஒரு பாம்பு அவரை கொத்திக் கொண்டு இருந்ததை கண்டு அனைவருமே அரண்டனர்.
வீடியோ
இதை அங்கு வந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தனர். இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
10 முறை பாம்பு
அப்போது அமித் உடலை பாம்பு 10 முறை கடித்திருப்பது தெரியவந்தது. ஆனால் பாம்பு கடிப்பதற்கு முன்பே அமித்தின் கழுத்து நெரிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அளித்த பிரேத பரிசோதனை முடிவை கொண்டு போலீஸார் ரவிதாவிடம் விசாரணை நடத்தினர்.
நாடகம்
முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்பது போல் நீலிக்கண்ணீர் வடித்தார். பிறகு போலீஸார் கேட்க வேண்டிய விதத்தில் கேட்ட போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். அப்போதுதான், "நான்தான் கணவரை கொலை செய்தேன்" என ஒப்புக் கொண்டார்.
ரவிதா வாக்குமூலம்
ரவிதாவின் வாக்குமூலம் குறித்து போலீஸார் கூறியிருப்பதாவது: அமித்தின் நண்பரான அமர்தீப்புக்கும் ரவிதாவுக்கும் இடையே கடந்த ஓராண்டாக கள்ளக்காதல் இருந்ததாம். அவர் அடிக்கடி அமித்தை பார்க்க வீட்டிற்கு வந்த போது இருவருக்குள்ளும் காதல் தீ பற்றிக் கொண்டது.
உறவு
இவ்வாறு கணவனுக்கு தெரியாமல் மனைவி தினமும் அமர்தீப்புடன் காதலை வளர்த்து வந்துள்ளார். இந்த விவகாரம் அமித்துக்கு தெரியவந்ததும் மனைவியை அவர் கண்டித்தார். ஆனாலும் இருவரும் கேட்கவில்லை. உறவை தொடர்ந்து கொண்டே வந்தனர்.
தகாத உறவு
இந்த நிலையில் அவ்வப்போது இந்த கள்ளக்காதல் தொடர்பாக கணவனுக்கும் மனைவிக்கும் தகராறு இருந்து வந்தது. ஒரு முறை ரவிதாவும் அமர்தீப்புக்கும் தனிமையில் இருந்ததை அமித் பார்த்துவிட்டார்.
அமித் ஆத்திரம்
அப்போது ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற அவர் ரவிதாவிடம் சண்டையிட்டதாக தெரிகிறது. இதையடுத்து ரவிதா அமித்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக காதலனிடம் ஐடியா கேட்டுள்ளார்.
பாம்பு
அவருக்கு அதற்காக உதவியுள்ளார். கடந்த 12 ஆம் தேதி இரவு அமித் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றனர். மேலும் கொலையை இயற்கை மரணமாக மாற்ற ரூ 1000 கொடுத்து பாம்பை வாங்கி வந்ததாக தெரிகிறது.
நம்ப வைத்த ரவிதா
இதை அமித்தின் உடல் மீது பாம்பை விட்டுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் அக்கம் பக்கத்தினரை அழுது கூப்பாடு போட்டு ரவிதா அழைத்து நம்ப வைக்க முயற்சித்தார். ஆனால் போலீஸார் இதுகுறித்து வனத்துறையினரிடம் விசாரணை நடத்தினர்.
10 முறை கடித்த பாம்பு
அப்போது அவர்கள் கூறுகையில், "பாம்புகள் பொதுவாக மனிதரை ஒரு முறை கொத்தினால் அந்த இடத்திலிருந்து உடனே சென்றுவிடும்" என்றனர். ஆனால் அமித்தின் உடல் மீது பாம்பு இருந்துள்ளது. மேலும் அமித்தை 10 முறை பாம்பு கடித்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பிரேத பரிசோதனையில் பகீர்
இதையடுத்து பிரேத பரிசோதனையும் போலீஸார் சந்தேகித்த படியே வந்துவிட்டது. இதையடுத்துதான் ரவிதாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர், கட்டிய கணவரை மனைவியே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications