மீரட் வன்முறை- பாஜக எம்.எல்.ஏ. மனைவி, சகோதரர் உட்பட 3600 பேர் மீது வழக்கு!!
மீரட்: மீரட் வன்முறைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ சங்கீத் சோம் மனைவி, சகோதரர் உட்பட 3,600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இருபிரிவினரிடையே நிகழ்ந்த மோதலில் 49 பேர் பலியாகினர். 40 ஆயிரம் பேர் அகதிகளாகினர். இம்மோதல் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ..சங்கீத் சோம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கீத் சோம் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீரட்டில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் பலர் தாக்கப்பட்டனர். வாகனங்கள் தீக்கிரையாகின.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறையில் இருக்கும் பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோமின் மனைவி, சகோதரர் மற்றும் 3,600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே உத்தரப்பிரதேச மாநில அனைத்து காவல்நிலையங்களிலும் 3 முஸ்லிம்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று மாநில காவல்துறை தலைவரை சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் வலியுறுத்தி ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இதை ஏற்று மாநிலம் முழுவதும் அனைத்து காவல்நிலையங்களில் முஸ்லிம்களை பணியில் அமர்த்தும் நடவடிக்கை மேற்கொள்வோம் என்று அம்மாநில காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications