அழுகிய நிலையில் சிதிலமடைந்த உடல்.. மேகாலயா சுரங்கத்திலிருந்து ஒருவரின் உடல் மீட்பு!
மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களில் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் தற்போது மீட்கப்பட்டு இருக்கிறது.
ஷில்லாங்: மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களில் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் தற்போது மீட்கப்பட்டு இருக்கிறது.
மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் சிக்கி இருக்கும் நபர்களை மீட்கும்படி இன்னும் நடந்து வருகிறது. அந்த சுரங்கத்தில் சிக்கியவர்கள் அனைவரும் இருந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
39 நாட்களுக்கு முன் 15 பணியாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினார்கள். இப்போதுதான் அங்கிருந்து முதல் நபரின் உடல் மீட்கப்பட்டு இருக்கிறது.

சுரங்கத்தில் சிக்கினார்கள்
ஒரு மாதம் முன் மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டது. அங்கு இருக்கும் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் அனுமதி பெறப்படாத நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கடந்த டிசம்பர் 12ம் தேதி குகைக்குள் இருந்த 15 பேரும் நீரில் சிக்கினார்கள்.

மிக மெதுவாக நடந்தது
சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் 39 நாட்களாக இந்த மீட்பு பணியில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை. சுரங்கத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றுவது கடினமான பணியாக இருந்ததால் யாரையும் மீட்க முடியவில்லை.

கண்டுபிடித்தனர்
கடந்த 7 நாட்களுக்கு முன் அந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் Underwater Remotely Operated Vehicle எனப்படும் சிறிய ரோபோட் மோட்டார் வாகனம் மூலம் இவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைடுத்தே சுரங்கத்தில் இருந் மற்றவர்களும் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

மீட்கப்ட்டது
தற்போது மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களில் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு இருக்கிறது. அவரின் உடல் மிகவும் சிதிலமடைந்து அழுகி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இவரின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மீதமுள்ளவர்களை மீட்கும்பணி நடந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications