காற்று, உணவு எதுவும் இல்லை.. மேகாலயா சுரங்கத்திலிருந்து வந்த துர்நாற்றம்.. மீட்பு படை அதிர்ச்சி!
மேகாலயாவில் பணியாளர்கள் சிக்கி இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து துர்நாற்றம் வருவதாக மீட்பு பணியாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
ஷில்லாங்: மேகாலயாவில் பணியாளர்கள் சிக்கி இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து துர்நாற்றம் வருவதாக மீட்பு பணியாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மேகாலயாவின் குகைக்குள் சிக்கிய பணியாளர்களை மீட்பது பெரிய சிக்கலாகி உள்ளது. இவர்கள் எப்போது மீட்கப்படுவார்கள் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கடந்த 12ம் தேதி குகைக்குள் இருந்த 15 பேரும் நீரில் சிக்கினார்கள்.

4 நாட்களாக நடக்கவில்லை
அங்கு 14 நாட்களுக்கு முன் பணியாளர்கள் சிக்கி இருந்தாலும் கடந்த 4 நாட்களாக எந்த விதமான மீட்பு பணியும் நடக்கவில்லை. உயர் அழுத்த மோட்டார் பம்புகள் இல்லாத காரணத்தால் இந்த மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. நாளை மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கும் என்று கூறுகிறார்கள்.

காற்று இருக்குமா
இந்த குகைக்குள் இருப்பவர்கள் நல்ல ஆக்சிஜனை சுவாசிக்கிறார்களா என்பதே பெரிய சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். அங்கு 14 நாட்களாக நீர் இருப்பதால் உள்ளே காற்று இருக்குமா என்பது சந்தேகம் என்று கூறுகிறார்கள். அதேபோல் அங்கு இருப்பவர்கள் 14 நாட்களாக எந்த உணவும் உட்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோசமான நாற்றம்
இந்த நிலையில் இந்த குகைகளில் இருந்து மோசமான நாற்றம் இரண்டு நாட்களாக வருகிறது. நேற்று குகைக்கு அருகே சென்ற மீட்பு படையினர் நாற்றம் வருவதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரிய அச்சம்
இதனால் தற்போது குகைக்குள் இருப்பவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதே சந்தேகம் என்று கூறப்படுகிறது. மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கிய பின்பே அங்கு நிலை என்ன என்பது தெரியும் என்று கூறுகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications