தீவிரவாத தாக்குதலில் அமர்நாத் பயணிகள் 7 பலி.. காஷ்மீர் முதல்வர், ஆளுநர் நேரில் அஞ்சலி
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பலியான அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேரின் உடலுக்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் ஆளுநர் என்.என்.வோஹ்ரா, துணை முதல்வர் நிர்மல் குமார் சிங் ஆகியோர் மலர் வளையம்
ஜம்மு: அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதால் 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். அவர்களின் உடலுக்கு காஷ்மீர் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி தங்களின் பயணத்தைத் தொடங்கினர்.

இந்நிலையில், நேற்று இரவு அனந்தநாக் மாவட்டம் பாடிங்கு என்ற பகுதி வழியாக யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். அதில், 7 யாத்ரீகர்கள் பரிதாபமாக பலியாகினர். 3 போலீசார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
தீவிரவாதத்திற்கு பலியான 7 பேரின் உடலுக்கு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி, ஆளுநர் என்.என்.வோஹ்ரா, துணை முதல்வர் நிர்மல் சிங்க் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications