இந்த தேசத்தை தலைகுனிய விடமாட்டேன்...- பாஜக கீதம் 'சபதத்தில்' மோடி முழக்கம்!
டெல்லி: இந்த நாட்டை யாருக்கும் அடிபணிய விடமாட்டேன் என பாஜக வெளியிட்டுள்ள 'சபதம்' பாடலில் முழங்கியுள்ளார் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.
தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக பாஜக கீதம் என்ற பெயரில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளது அக்கட்சி.
இதன் குறுந்தகட்டை நேற்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் 'பாரத வெற்றிப் பேரணி' தொடக்க விழாவில் வெளியிட்டனர்.

இந்தப் பாடலை சைய்ய சைய்ய.. புகழ் சுக்வீந்தர் சிங் பாடியுள்ளார். ஆதேஷ் ஸ்ரீவத்சவா இசையில், பிரசூன் ஜோஷி எழுதியுள்ளார்.
இந்த பாஜக ஆல்பத்தின் சிறப்பே, நரேந்திர மோடி தன் குரலில் சில வரிகளை வாசித்திருப்பதுதான். சில வரிகளை லேசாக ராகம் போட்டும் படித்துள்ளார் மோடி. அவரது குரல் இந்த ஒற்றைப் பாடல் ஆல்பத்துக்கு கூடுதல் சுவாரஸ்யத்தைச் சேர்த்துள்ளது.
சௌகந்த் - மெய்ன் தேஷ் நஹின் ஜூக்னே தூங்க்கா... (சபதம் - என் தேசத்தை தலைகுனிய விடமாட்டேன்!) என்ற தலைப்பில் இந்த ஆல்பம் வெளியாகியுள்ளது.
இந்த ஆல்பத்தில் நரேந்திர மோடி படித்துள்ள கவிதை வரிகளின் தமிழாக்கம் இது:
என் நாட்டை புழுதியில் மங்கிப் போக விடமாட்டேன்
என இந்த மண்ணில் சபதம் ஏற்கிறேன்...
ஆனால் இந்த தேசத்து மக்கள் விழித்துக் கொண்டனர்,
ஒவ்வொரு இந்தியனும் வெல்வான்..
இந்த தேசத்தை யாருக்கும் அடிபணிய விடமாட்டேன்...
யார் முன்னும் தலைகுனிய விடமாட்டேன்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications