மெஸ்ஸியை பார்க்க முடியல.. சால்ட் லேக் மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்.. பதற்றத்தில் கொல்கத்தா!
கொல்கத்தா: அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை பார்க்க டிக்கெட் வாங்கி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தரப்பில் மைதானத்தை சுற்றி மெஸ்ஸி வலம் வருவார் என்று சொல்லப்பட்ட சூழலில், அவர் பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியேறினார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாட தொடங்கினர். வாட்டர் பாட்டில்களை வீச தொடங்கினர். இதனால் ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு 70 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மெஸ்ஸி காணொளி மூலமாக திறந்து வைத்தார். இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் மெஸ்ஸி தோன்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.

அதற்காக டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. ஒரு டிக்கெட் மதிப்பு ரூ.4,500 முதல் ரூ.12,500 வரை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல் மெஸ்ஸி மைதானம் முழுக்க சுற்றி வந்து ரசிகர்களை சந்திப்பார் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சிலையை திறந்து வைத்த மெஸ்ஸி, நேராக மைதானத்திற்கு வந்தார். ஆனால் 30 நிமிடங்கள் மட்டுமே மைதானத்தில் இருந்தார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மெஸ்ஸியை சுற்றி இருந்தனர். அதுமட்டுமல்லாமல் மெஸ்ஸியின் பாதுகாவலர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அவரை சுற்றி காணப்பட்டனர்.
இதனால் மைதானத்தில் இருந்தே ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை. இதன்பின் அங்கிருந்து புறப்பட்ட, ரசிகர்கள் கொந்தளிக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் கைகளில் இருந்த வாட்டர் பாட்டிலை வீசி எறிய தொடங்கினர். அதேபோல் மைதானத்தில் இருந்த சேர்களையும் உடைக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் சூழல் கலவரமானது. இதனால் மெஸ்ஸியை பார்க்க சென்ற ரசிகர்கள் கலவரத்தை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications