கொரோனா படுத்தும்பாடு... மத்திய பிரதேச மாநில பால்காரர்களின் பலே ஐடியா
போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் பால்காரர்கள் பால் விநியோகிக்கும் முறை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஒருவருக்கு ஒருவர் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள ஆகச்சிறந்த அத்தனை வழிமுறைகளையும் மக்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் கடந்த மாதம் கேரளாவில் உள்ள நியாயவிலை கடை ஒன்றில் பெரிய பிவிசி குழாய் ஒன்றை பொருத்தி அதன் மூலம் அரிசி விநியோகம் செய்யப்பட்டது. இப்போது மத்தியப்பிரதேச மாநிலம் போபால், இந்தூர், உள்ளிட்ட பகுதிகளில் பால்காரர்கள் பால் விநியோகிக்க சில புதுமையான உத்திகளை கையாண்டு வருகின்றனர்.
பால் கேன்களுடன் ஒன்றரை இஞ்ச் குழாயை இணைத்து அதில் புனல் மூலம் பாலை ஊற்றி வருகின்றனர். இது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் தெரிந்தாலும் சமூக விலகலின் அவசியம் இதன் மூலம் உணர்த்தப்படுகிறது. பால்காரர்களின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பாத்திரங்களை குழாய்க்கு அடியில் பிடித்து பாலை பெற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறு பால் விநியோகம் செய்வதன் மூலம் நுகர்வோருக்கும் தங்களுக்கும் குறைந்தது 5 அடி இடைவெளி ஏற்படுவதாகவும், இதன் மூலம் அச்சமின்றி தங்களால் பால்வியாபாரத்தை மேற்கொள்ள முடிவதாகவும் கூறுகின்றர் இந்தூர் நகர பால் வியாபாரிகள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications