அம்மா மீண்டும் முதல்வராகணும்: சபரிமலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு பிராத்தனை
Subscribe to Oneindia Tamil
சபரிமலை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழந்த அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டுமென தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து இருமுடி சுமந்து சபரிமலைக்கு செல்வது வாடிக்கை. இந்த ஆண்டும் மண்டல பூஜை சீசனை முன்னிட்டு நேற்று சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனை செய்தார். அப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க ஐயப்பன் கோவிலில் செந்தில் பாலாஜி சிறப்பு பிராத்தனை நடத்தியதாக திருவிதாங்கூர் தேவஸ்தான கமிட்டி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications