குடும்ப பிரச்சனையால் வீட்டில் இருந்து ஓடி வந்த சிறுமி டெல்லியில் 4 பேரால் பலாத்காரம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உள்ள சிந்தியா ஹவுஸின் பின்புறத்தில் சிறுமி ஒருவரை 3 முதல் 4 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் குடும்ப பிரச்சனையால் வீட்டை விட்டு வெளியேறி ரயில் மூலம் டெல்லி வந்துள்ளார். ரயில் நிலையம் அருகே அவரை 3 முதல் 4 பேர் கடத்திச் சென்று நாடாளுமன்றம் அருகே உள்ள சிந்தியா ஹவுஸுக்கு பின்புறம் கொண்டு சென்றுள்ளனர்.
அங்குள்ள வாகனங்கள் நிறுத்திமிடத்தில் வைத்து அவர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். வாகன நிறுத்துமிடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அலங்கோலமாக கிடந்த சிறுமி அருகில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications