என்னைக் காப்பாத்துங்க..கண்ணீருடன் வீடியோ போட்ட விஷால் பட நடிகை! இவரா? என்னாச்சு? பரபரப்பான ரசிகர்கள்
மும்பை: மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் முதல் பத்து இடத்துக்குள் வந்து கவனம் பெற்று பாலிவுட்டில் அறிமுகமானவர் தனுஸ்ரீ தத்தா. தமிழில் விஷாலுக்கு ஜோடியாக தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தன்னை காப்பாற்ற வேண்டும் என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரை உலகில் திடீரென நடிகைகள் மிகப் பிரபலமாவதும், அதற்குப் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் போவதும் சகஜம் தான். அப்படி ஒரு நடிகை தான் தனுஸ்ரீ தத்தா. கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டவர்.
டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்த்த நிலையில் முதல் 10 இடத்துக்குள் வந்து ஏமாற்றம் தந்தார். அதே நேரத்தில் அந்த போட்டியின் மூலம் பாலிவுட்டில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. ஆசிக் பனாயா அப்னே என்ற படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார்.

படம் ஓரளவு வரவேற்பு பெற்றாலும் அந்தப் படத்தில் ஈடுபட்ட ஆசிக் பாநாய பாடல் அவரை மிகப் பிரபலம் ஆக்கியது. முதல் படத்திலேயே தைரியமாக கிளாமராக நடித்திருந்தார் தனுஸ்ரீ தத்தா. இதை அடுத்து அவருக்கு பாகம் பாக், ரிஸ்க், குட்பாய் பேட் பாய், ஸ்பீடு, ராமா தி சேவியர், சாக் லே டீப் சீக்ரெட்ஸ், வீரபத்திரா போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழிலும் 2010ல் விஷால் ஜோடியாக தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.
ஆனாலும் அதற்குப் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தனுஸ்ரீ தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் ஹிந்தி சினிமா பக்கம் திரும்பினார். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் அதற்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். இதற்கிடையே பிரபல நடிகர் நானா படேகர் மீ டூ விவகாரத்தில் பாலியல் குற்றச்சாட்டை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்குப் பிறகு தனுஸ்ரீ என்ன ஆனார் என்பதை தெரியவில்லை. இந்த நிலையில் தான் தன்னை காப்பாற்ற வேண்டும் என திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அழுதபடி பேசி இருக்கும் அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் எனது வீட்டுக்கு மேலேயும் கீழேயும் அதிகமாக சத்தம் கேட்கிறது. இது குறித்து நான் வீட்டின் மேனேஜரிடம் புகார் அளித்தும் நடவடிக்கையே இல்லை. ஒரு கட்டத்தில் புகார் அளித்து அளித்து சோர்வாகி விட்டேன். ஒரு கட்டத்தில் புகார் கொடுப்பதை நிறுத்திய விட்டேன். இப்போதும் அந்த சத்தங்களுடன் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஐந்து வருடங்களாக இந்த சத்தத்தால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதோடு உடல் நிலையும் சரியில்லாமல் போய்விட்டது. மன அழுத்தம் காரணமாக எனக்கு நிறைய பிரச்சனைகளும் வந்திருக்கிறது" எனக் கூறியிருக்கிறார்.
வீடியோவில் பேசிக் கொண்டிருக்கும் போதே தனுஸ்ரீ தத்தா கதறி அழுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் வீட்டு பிரச்சினையை எல்லாம் பேசி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருப்பது விளம்பரத்திற்காக எனவும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications