இதுதான் விஷயமே.. மிசோரத்தில் திடீரென காங்கிரசுக்கு எகிறிய மவுசு.. பாஜகவை ஒதுக்கும் மக்கள்?
ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலமான மிசோரம் சட்டசபைத் தேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் நிலையில், அங்கே திடீரென காங்கிரஸுக்கு மவுசு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டு மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடக்கும் சட்டசபைத் தேர்தல் என்பதால் இதை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் திட்டமாக இருந்தது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை டிச.3ஆம் தேதி நடைபெற உள்ளது.
மிசோரம்: இதில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் வடகிழக்கு மாநிலமான மிசோரமில் அரசியல் களம் முற்றிலுமாக வேறாக இருக்கிறது. மிசோரம் மாநிலத்தைப் பொறுத்தவரை ஏனென்றால் மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக காங்கிரஸ் என தேசிய கட்சிகள் போட்டியில் இருக்கிறது. தெலுங்கானாவில் பாஜக கடும் போட்டி தரவில்லை என்றாலும் காங்கிரஸ் அங்கே ஆட்சியை அமைக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.
நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய வாக்குப்பதிவும் கூட அதையே தான் காட்டியுள்ளது. அதேநேரம் தேர்தலுக்கு பிந்தைய வாக்குப்பதிவில் மிசோரம் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கே தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 40 இடங்கள்: மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 இடங்கள் இருக்கும் நிலையில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெற 21 சீட்களில் வெல்ல வேண்டும். இருப்பினும், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் அங்கே தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் என எந்தவொரு கட்சியாக இருந்தாலும் ஆட்சியைப் பிடிக்க மற்ற கட்சியுடன் கூட்டணி அமைத்தாக வேண்டும் என்ற சூழலே இருக்கும்.
இதற்கிடையே மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் என இரு கட்சிகளும், பாஜகவுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளது.
பாஜக வேண்டாம்: இது குறித்து மிசோரம் முதலமைச்சரும், மிசோ தேசிய முன்னணி கட்சித் தலைவருமான ஜோரம்தங்கா கூறுகையில், "தேர்தலுக்குப் பிந்தைய தொடங்கு சட்டசபையாக இருந்தால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா கேட்கிறீர்கள்.. அது தொங்கு சட்டசபையாக இருக்காது.
எங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும். நாங்கள் இதுவரை பாஜகவைக் கூட்டணிக்கு அழைக்கவில்லை. அதேபோல அவர்களும் எங்களைக் கூட்டணிக்கு அழைக்கவில்லை. மத்தியில் நாங்கள் என்டிஏ கூட்டணியில் இருந்தாலும், மாநிலத்தில் கூட்டணியை ஏற்படுத்தும் திட்டம் இல்லை" என்றார்.
அதேபோல ஜோரம் மக்கள் முன்னணியும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் வன்லால்த்தனா, பேசுகையில், "நாங்கள் தனிப்பெரும்பான்மை பெறுவோம் என்று நம்புகிறோம். கள நிலவரம் அனைவருக்கும் தெரியும். அதேநேரம் தொங்கு சட்டசபை அமைந்தாலும் நிச்சயம் பாஜக உடன் கூட்டணி இருக்காது. மிசோரம் விவகாரத்தை பாஜக மிக மோசமாகக் கையாள்கிறது. இதற்கு மக்களிடையே கடும் கோபம் இருக்கிறது" என்றார்.
காங்கிரசுக்கு மவுசு: மேலும், தற்போது வரை வெளியான சர்வேக்களின் சர்வேக்களை வைத்துப் பார்க்கும் போது காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்கள் கிடைக்கும். 40 சீட்களை கொண்ட மிசோரம் சட்டசபையில் இது பெரும்பான்மையைத் தீர்மானிப்பதில் முக்கிய நம்பராக இருக்கும். மேலும், இரு முக்கிய பிராந்திய கட்சிகளும் பாஜக உடன் கூட்டணியை நிராகரித்துள்ள நிலையில், அங்கே காங்கிரசுக்கான மவுசு முடிவுகள் வந்த பிறகு எகிறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications