பீகார்: பீகாரில் நடக்கும் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உடன் இணைந்து இந்த பேரணியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வாக்குகள் திருட்டு குற்றச்சாட்டை தெரிவித்தும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வாக்காளர் உரிமை யாத்திரை பேரணியில் ஸ்டாலின் கலந்துகொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், இது தொடர்பாக வாக்காளர் பட்டியலில் போட்டோக்களையும் வெளியிட்ட ராகுல் காந்தி, ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும் சாடியுள்ளார்.
அவர் தனது புகாரில், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்? வீடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்?வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்வது ஏன்? எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், எதிர்க்கட்சிகளை மிரட்டுவது ஏன்? பாஜகவின் ஏஜண்டைப் போல தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிராக ராகுல் காந்தி 'வாக்காளர் அதிகாரம்' என்கிற பெயரில் பேரணியை நடத்தி வருகிறார். பீகார் முழுக்க பயணிக்கும் அவர் மக்களை களத்தில் சென்று சந்தித்து தேர்தல் ஆணையம் மீதான தனது குற்றச்சாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். பீகாரில் ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் இந்தப் பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்றார்.
Aug 27, 2025, 1:33 pm IST
பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நடக்கும் வெற்றி விழாவில் நான் உறுதியாக , நிச்சயமாக பங்கேற்பேன்.. நன்றி வணக்கம் என முதல்வர் ஸ்டாலின் தனது உரையை முடித்தார்
Aug 27, 2025, 1:33 pm IST
அருமை சகோதரர் ராகுல் காந்தி இன்று இந்தியாவுக்கான வழக்கறிஞராக இருக்கிறார். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும். இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும். மக்கள் சக்திக்கு இணையானது எதுவும் இல்லை என்று சகோதரர் தேஜஸ்வி காண்பித்து கொண்டிருக்கிறார். நீங்கள் 2 பேரும் பீகாரில் பெறப்போகும் வெற்றி தான் அடுத்தடுத்து ‛இந்தியா’ கூட்டணிக்கு கிடைக்கும் வெற்றிக்கு அடித்தளமாக அமையப்போகிறது - ஸ்டாலின்
Aug 27, 2025, 1:33 pm IST
மக்களிடம் இருந்து வாக்குரிமையை பறிக்கும் பாஜகவின் அதிகாரத்தை மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள். அதை தான் பீகாரில் இன்று கூடியிருக்கும் கூட்டம் எடுத்து காட்டுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கான அடித்தளத்தை இங்குள்ள பாட்னாவில் தான் விதைத்தோம். எதிர்க்கட்சிகள் ஒன்று சேரமாட்டார்கள் என்று நினைத்த பாஜகவின் கர்வத்தை தகர்த்த இடம் தான் பீகார். 400 இடங்கள் என்று கனவு கண்டவர்களை 240 இடங்களில் அடக்கியது இந்தியா கூட்டணி. மெஜராிட்டி என்று ஆட்டம் போட்டவர்கள் மைனாரிட்டி ஆகிவிட்டார்கள். மக்கள் சக்தி முன்பு எப்படிப்பட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டு தான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் பீகார் நிரூபிக்க வேண்டும் - ஸ்டாலின்
Aug 27, 2025, 1:31 pm IST
ராகுல் காந்தியின் வார்த்தைகளிலும், கண்களிலும் பயம் இருக்காது. ராகுல் காந்தியை பொறுத்தவரை அரசியலுக்காகவும், மேடைக்காகவும் பேசும் நபர் இல்லை. அவர் பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனத்துடன் இருப்பவர். இப்போது ஏன் பாஜக பாய்கிறார்கள் என்றால்.. தேர்தல் எப்படி நடக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். இதனால் தான் பாஜக அவர் மீது பாய்கிறது - ஸ்டாலின்
Aug 27, 2025, 1:31 pm IST
மிரட்டலுக்கு அஞ்சுபவர் ராகுல் காந்தி இல்லை - பீகாரில் ஸ்டாலின் பேச்சு
Aug 27, 2025, 1:29 pm IST
சகோதரர்கள் ராகுலும், தேஜஸ்வி ஆகியோர் பீகாரில் பெறப்போகும் வெற்றியை தடுக்க முடியாத பாஜக கொல்லைப்புறம் வழியாக வேலையை பார்க்கிறது. இதற்கு எதிராக சகோதரர்கள் எடுத்துள்ள போராட்டத்தை வாழ்த்துவதற்காக தான் இங்கு வந்துள்ளேன். ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை அம்பலப்படுத்தி வருகிறார். இதற்கு தேர்தல் ஆணையத்தால் முறையான பதில் கூட சொல்ல முடியவில்லை. ஆனால் ராகுல் காந்தி உறுதி மொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ் குமார் சொல்கிறார். இந்த மிரட்டலுக்கு எல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா? - ஸ்டாலின்
Aug 27, 2025, 1:27 pm IST
தேர்தல் ஆணையத்தை கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டார்கள். 65 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. சொந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதை விட பயங்கரவாதம் இருக்க முடியுமா?. அனைத்து அடையாள அட்டை இருந்தாலும் அவர்களுக்கு முகவரி இல்லாமல் ஆக்கி உள்ளனர் - ஸ்டாலின்
Aug 27, 2025, 1:19 pm IST
பீகார் தேர்தலில் பாஜக தோற்கப்போகிறது. பீகார் தேர்தலில் ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவ் வெற்றியை தேடி தருவார்கள். அதனால் தான் இந்த வெற்றியை தடுக்க பார்க்கிறார்கள். நியாயமாக வாக்குப்பதிவு நடந்தால் பாஜக கூட்டணி தோற்றுவிடும் என்று மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள் - ஸ்டாலின்
Aug 27, 2025, 1:18 pm IST
ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவின் நட்பு அரசியல் ரீதியானது அல்ல. உடன்பிறப்புகளில் நட்பாக உள்ளது. ஜனநாயகத்தை காக்க மக்கள் நலனுக்காக ஒன்று சேர்ந்து உள்ளீர்கள். பீகார் தேர்தலில் உங்களுக்கு வெற்றியை பெற்று தருவது இந்த நட்பு தான். ராகுல், தேஜஸ்வி செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள்.
Aug 27, 2025, 1:13 pm IST
கடந்த ஒரு மாதமாக இந்தியாவே பீகாரை தான் பார்த்து கொண்டு வருகிறது. இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் பீகார் போர்க்கொடி தூக்கி உள்ளது - ஸ்டாலின்
Aug 27, 2025, 1:12 pm IST
பீகார் மக்களை பார்ப்பதற்காக 2 ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து வந்திருக்கிறேன். பீகார் என்றாலே லாலு பிரசாத் யாதவ் தான் நினைவுக்கு வருவார்கள். கலைஞரும், லாலுவும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர்.
Aug 27, 2025, 1:12 pm IST
பீகார் வாக்காளர் உரிமை யாத்திரை பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தமிழில் உரையாற்றி வருகிறார். முக ஸ்டாலின் உரையை இன்னொருவரின் பீகார் மக்களுக்கு புரியும் வகையில் மொழிப்பெயர்த்து வருகிறார்.
Aug 27, 2025, 1:12 pm IST
ராகுல் காந்தி உடனான பேரணியை முடித்த முதல்வர் ஸ்டாலின் பீகார் வாக்காளர் உரிமை யாத்திரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார்.
Aug 27, 2025, 12:24 pm IST
ராகுல் காந்தியின் பேரணியில் முதல்வர் ஸ்டாலின் உடன் திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்கள் பங்கேற்பு.
Aug 27, 2025, 12:13 pm IST
ராகுல் காந்தியின் யாத்திரையில் ஸ்டாலின் பங்கேற்பு
பீகாரில் ராகுல் காந்தியின் ‛வாக்காளர் உரிமை யாத்திரை’யில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு. திறந்த ஜீப்பில் ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் ஊர்வலமாக சென்று வருகிறார்.
Aug 27, 2025, 11:17 am IST
பீகாரில் நடக்கும் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் சற்று நேரத்தில் கலந்து கொள்கிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உடன் இணைந்து இந்த பேரணியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
11:17 AM, 27 Aug

12:13 PM, 27 Aug
ராகுல் காந்தியின் யாத்திரையில் ஸ்டாலின் பங்கேற்பு
பீகாரில் ராகுல் காந்தியின் ‛வாக்காளர் உரிமை யாத்திரை’யில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு. திறந்த ஜீப்பில் ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் ஊர்வலமாக சென்று வருகிறார்.
12:24 PM, 27 Aug
ராகுல் காந்தியின் பேரணியில் முதல்வர் ஸ்டாலின் உடன் திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்கள் பங்கேற்பு.
1:12 PM, 27 Aug
ராகுல் காந்தி உடனான பேரணியை முடித்த முதல்வர் ஸ்டாலின் பீகார் வாக்காளர் உரிமை யாத்திரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார்.
1:12 PM, 27 Aug
பீகார் வாக்காளர் உரிமை யாத்திரை பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தமிழில் உரையாற்றி வருகிறார். முக ஸ்டாலின் உரையை இன்னொருவரின் பீகார் மக்களுக்கு புரியும் வகையில் மொழிப்பெயர்த்து வருகிறார்.
1:12 PM, 27 Aug
பீகார் மக்களை பார்ப்பதற்காக 2 ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து வந்திருக்கிறேன். பீகார் என்றாலே லாலு பிரசாத் யாதவ் தான் நினைவுக்கு வருவார்கள். கலைஞரும், லாலுவும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர்.
1:13 PM, 27 Aug
கடந்த ஒரு மாதமாக இந்தியாவே பீகாரை தான் பார்த்து கொண்டு வருகிறது. இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் பீகார் போர்க்கொடி தூக்கி உள்ளது - ஸ்டாலின்
1:18 PM, 27 Aug
ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவின் நட்பு அரசியல் ரீதியானது அல்ல. உடன்பிறப்புகளில் நட்பாக உள்ளது. ஜனநாயகத்தை காக்க மக்கள் நலனுக்காக ஒன்று சேர்ந்து உள்ளீர்கள். பீகார் தேர்தலில் உங்களுக்கு வெற்றியை பெற்று தருவது இந்த நட்பு தான். ராகுல், தேஜஸ்வி செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள்.
1:19 PM, 27 Aug
பீகார் தேர்தலில் பாஜக தோற்கப்போகிறது. பீகார் தேர்தலில் ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவ் வெற்றியை தேடி தருவார்கள். அதனால் தான் இந்த வெற்றியை தடுக்க பார்க்கிறார்கள். நியாயமாக வாக்குப்பதிவு நடந்தால் பாஜக கூட்டணி தோற்றுவிடும் என்று மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள் - ஸ்டாலின்
1:27 PM, 27 Aug
தேர்தல் ஆணையத்தை கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டார்கள். 65 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. சொந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதை விட பயங்கரவாதம் இருக்க முடியுமா?. அனைத்து அடையாள அட்டை இருந்தாலும் அவர்களுக்கு முகவரி இல்லாமல் ஆக்கி உள்ளனர் - ஸ்டாலின்
1:29 PM, 27 Aug
சகோதரர்கள் ராகுலும், தேஜஸ்வி ஆகியோர் பீகாரில் பெறப்போகும் வெற்றியை தடுக்க முடியாத பாஜக கொல்லைப்புறம் வழியாக வேலையை பார்க்கிறது. இதற்கு எதிராக சகோதரர்கள் எடுத்துள்ள போராட்டத்தை வாழ்த்துவதற்காக தான் இங்கு வந்துள்ளேன். ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை அம்பலப்படுத்தி வருகிறார். இதற்கு தேர்தல் ஆணையத்தால் முறையான பதில் கூட சொல்ல முடியவில்லை. ஆனால் ராகுல் காந்தி உறுதி மொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ் குமார் சொல்கிறார். இந்த மிரட்டலுக்கு எல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா? - ஸ்டாலின்
1:31 PM, 27 Aug
மிரட்டலுக்கு அஞ்சுபவர் ராகுல் காந்தி இல்லை - பீகாரில் ஸ்டாலின் பேச்சு
1:31 PM, 27 Aug
ராகுல் காந்தியின் வார்த்தைகளிலும், கண்களிலும் பயம் இருக்காது. ராகுல் காந்தியை பொறுத்தவரை அரசியலுக்காகவும், மேடைக்காகவும் பேசும் நபர் இல்லை. அவர் பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனத்துடன் இருப்பவர். இப்போது ஏன் பாஜக பாய்கிறார்கள் என்றால்.. தேர்தல் எப்படி நடக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். இதனால் தான் பாஜக அவர் மீது பாய்கிறது - ஸ்டாலின்
1:33 PM, 27 Aug
மக்களிடம் இருந்து வாக்குரிமையை பறிக்கும் பாஜகவின் அதிகாரத்தை மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள். அதை தான் பீகாரில் இன்று கூடியிருக்கும் கூட்டம் எடுத்து காட்டுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கான அடித்தளத்தை இங்குள்ள பாட்னாவில் தான் விதைத்தோம். எதிர்க்கட்சிகள் ஒன்று சேரமாட்டார்கள் என்று நினைத்த பாஜகவின் கர்வத்தை தகர்த்த இடம் தான் பீகார். 400 இடங்கள் என்று கனவு கண்டவர்களை 240 இடங்களில் அடக்கியது இந்தியா கூட்டணி. மெஜராிட்டி என்று ஆட்டம் போட்டவர்கள் மைனாரிட்டி ஆகிவிட்டார்கள். மக்கள் சக்தி முன்பு எப்படிப்பட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டு தான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் பீகார் நிரூபிக்க வேண்டும் - ஸ்டாலின்
1:33 PM, 27 Aug
அருமை சகோதரர் ராகுல் காந்தி இன்று இந்தியாவுக்கான வழக்கறிஞராக இருக்கிறார். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும். இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும். மக்கள் சக்திக்கு இணையானது எதுவும் இல்லை என்று சகோதரர் தேஜஸ்வி காண்பித்து கொண்டிருக்கிறார். நீங்கள் 2 பேரும் பீகாரில் பெறப்போகும் வெற்றி தான் அடுத்தடுத்து ‛இந்தியா’ கூட்டணிக்கு கிடைக்கும் வெற்றிக்கு அடித்தளமாக அமையப்போகிறது - ஸ்டாலின்
1:33 PM, 27 Aug
பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நடக்கும் வெற்றி விழாவில் நான் உறுதியாக , நிச்சயமாக பங்கேற்பேன்.. நன்றி வணக்கம் என முதல்வர் ஸ்டாலின் தனது உரையை முடித்தார்
MK Stalin Public Rally in Bihar LIVE News Updates in Tamil: Tamil Nadu CM MK Stalin joins Rahul Gandhi’s Voter Adhikar Yatra in Bihar. Read Out the LIVE News updates in tamil from Darbhanga rally as both leaders address the public before Stalin returns to Chennai.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.