எம்.எல்.ஏக்களை கூட்டி வைத்து மிரட்டிய அகிலேஷ் யாதவ்.. பணிந்த முலாயம் சிங்
லக்னோ: சமாஜ்வாதி கட்சியிலிருந்து உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவை 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்து அக்கட்சி தலைவரும், அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங் உத்தரவிட்டிருந்த நிலையில், பதிலுக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தினார் அகிலேஷ் யாதவ்.
உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தையும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. குறிப்பாக நேற்று கட்சி சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முலாயம் அறிவித்தார். அதில் அகிலேஷின் ஆதரவாளர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. இதற்கு போட்டியாக அகிலேஷ் 35 பேர் கொண்ட தனிபட்டியல் ஒன்றை வெளியிட்டார். இது பிரிவை அதிகமாக்கியது. இந்நிலையில்தான், 6 வருடங்களுக்கு கட்சியிலிருந்து, அகிலேஷ் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களோடு அகிலேஷ் யாதவும், முலாயம் சிங்கும் இன்று காலை ஆலோசனைகளில் ஈடுபட்டனர். முலாயம் சிங் வரும் 2017 பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களோடு ஆலோசனை நடத்திய நிலையில், எம்.எல்.ஏக்களுடன் அகிலேஷ் யாதவ் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.
இதில் 150க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், எம்.எல்.சிக்கள் பங்கேற்று அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அகிலேஷ் யாதவுடன் ஆலோசனை நடத்தினர். கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் முலாயம் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியோ, அகிலேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆதரவு அவருக்கு இருப்பதாக தெரிவித்தார்.
தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பலத்தை காட்ட அகிலேஷ் யாதவ் இந்த மீட்டிங்கை நடத்தினார். எனவே தந்தைக்கு எதிராக அவர் தோள் தட்டி எதிரே நிற்பது தெளிவானது. இந்த நிலையில்தான் மதியம் 2 மணியளவில் அகிலேஷ் யாதவை சஸ்பெண்ட் செய்த உத்தரவை முலாயம் வாபஸ் பெற்றார். அகிலேஷ் மிரட்டியே காரியத்தை சாதித்துவிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications