மொபைல் பவர் பேங்கால் 5 மணி நேரம் தாமதம்.. டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த களேபரம்!
டெல்லி ஏர்போர்ட்டில் பயணிகள் கொண்டு வந்த பவர் பேங்க் சாதனத்தால் பெரிய பிரச்சனை உருவாகி இருக்கிறது.
டெல்லி: டெல்லி ஏர்போர்ட்டில் பயணிகள் கொண்டு வந்த பவர் பேங்க் சாதனத்தால் பெரிய பிரச்சனை உருவாகி இருக்கிறது.
இதனால் நேற்று மட்டும் 5 மணி நேரம் தாமதமாக விமானங்கள் புறப்பட்டு இருக்கிறது. நேற்று நிறைய பயணிகள் ஒரே சமயத்தில் மொபைல் பவர் பேங்க் கொண்டு வந்ததே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம் ஆகும்.
இதற்கு பின் பாஜக கட்சியை சேர்ந்த ஹேமா மாலினியும் முக்கிய காரணம் என்று டெல்லி ஏர்போர்ட் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த தாமதம் காரணமாக டெல்லி ஏர்போர்ட் விதிகளில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்படலாம்.

100க்கும் அதிகம்
நேற்று மட்டும் டெல்லியில் 100க்கும் அதிகமான மொபைல் பவர் பேங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரே நாளில் எப்போதும் இவ்வளவு பவர் பேங்குகள் கொண்டு வரப்பட்டது இல்லை என்று டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் ஒவ்வொரு பவர் பேங்க்காக சோதனை செய்துள்ளார்கள்.

காரணம்
எல்லா மொபைல் பவர் பேங்குகளையும் சோதனை செய்ய முக்கிய காரணம் இருக்கிறது என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி தற்போது வரும் பவர் பேங்குகள் பல வெடிக்க கூடிய தன்மையுடன் இருப்பதாக கூறியுள்ளனர். சில பவர் பேங்குகள் அதிக விமானத்தில் வானத்தில் பறக்கும் போது தீ பற்றிக்கொள்வதாக கூறியுள்ளனர்.

தடை செய்ய ஆலோசனை
ஆனால் இன்னும் டெல்லி விமான நிலையத்தில் பவர் பேங்குகள் தடை செய்யப்படவில்லை. விரைவில் லோக்கல் மாடல் பவர் பேங்குகள், கொரியன் பவர் பேங்குகள் ஆகியவை தடை செய்யப்படலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது. வெடிக்க கூடியது என்று ஏற்கனவே சில ஆண்ட்ராய்ட் போன்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

ஹேமா மாலினி
நேற்று டெல்லி விமான நிலையத்திற்கு பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் நடிகை ஹேமா மாலினியும் பவர் பேங்குடன் வந்துள்ளார். இவரது பொருட்களை சோதனை செய்யவே அதிக நேரம் பிடித்து இருக்கிறது. இதனால் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மும்பையில் இருந்து டெல்லி செல்ல இருந்த விமானமும் தாமதமாகி உள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications