தீ விபத்தில் இறந்தோர் குடும்பத்திற்கு, மத்திய அரசு ரூ.2 லட்சம், கேரள அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு
டெல்லி: கேரள கோவில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ. 2 லட்சமும், கேரள அரசு சார்பில் ரூ. 10 லட்சமும் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பராவூர் புட்டிங்கல் தேவி கோவில் வானவேடிக்கையின் போது எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டது. இதில் கோவில் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கேரள மாநில அரசும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளது. இதன்படி, இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications