குஜராத் தேர்தல் வளர்ச்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் இடையேயான மோதல்... மோடி பரபர பேச்சு!
குஜராத் சட்டசபை தேர்தல் வளர்ச்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் இடையேயான மோதல் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
Recommended Video

அஹமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் வளர்ச்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் இடையே நடக்கும் மோதலில் குடும்ப ஆட்சியை வீழ்த்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியள்ளார்.
குஜராத் சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருப்பதற்கு அஹமதாபாத்தில் திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டமே முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் பாஜக சார்பில் கவுரவ யாத்திரையின் நிறைவு விழா நேற்ற நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பொதுக்கூட்ட மேடையில் மக்கள் மத்தியில் பேசினார். குஜராத் தேர்தல், வளர்ச்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் இடையில் நடக்கும் மோதலாகும். இதில் வளர்ச்சி அரசியல் வெற்றி கொள்ளும். வாரிசு அரசியல் மண்ணை கவ்வும்.

அவதூறு பரப்பும் காங்.
பாஜக தலைவர் அமித்ஷா 2014 நாடாளுமன்றத் தேர்தலின் "மேன் ஆஃப் தி மேட்ச்". இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்சி அவருடைய மகன் நிறுவனத்தை வைத்து அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

காங்கிரசுக்கு சவால்
மதவாதம், சாதியம் மற்றும் வாரிசு அரசியலை ஆயதமாக வைத்து மக்களை தவறான பாதைக்கு இழுத்து செல்கிறது காங்கிரஸ். இதனை வைத்து தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. குஜராத்தில் மக்களை ஈர்க்கும் முயற்சிக்கு பதிலாக வளர்ச்சித் திட்டங்களுடன் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாரா என சவால் விடுகிறேன்.

காங் பற்றி தெரியாதா?
குஜராத் மக்களை பார்த்து காங்கிரசுக்கு எப்போதுமே பொறாமைதான். அதனால், குஜராத்தையும், குஜராத் மக்களையும் அவர்கள் தூக்கி எறியும் முள்ளாகத்தான் நினைக்கிறார்கள். சர்தார் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய் ஆகியோருக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்ற வரலாறே அதற்கு சாட்சி.

ஊழல் கட்சி
காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி. அவர்கள் பல்வேறு பிரதமர்களையும், முதல்வர்களையும் தந்திருந்தாலும், தற்போது பொய்யை பரப்பும் பணியில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். நாட்டில் அவநம்பிக்கையை உருவாக்கியவர்கள்.

ஜிஎஸ்டியில் பங்கு உண்டு
ஜிஎஸ்டியை பற்றி விமர்சித்து, குறை கூறுகிறார்கள். ஜிஎஸ்டி குறித்து எடுக்கப்பட்ட முடிவில் காங்கிரசுக்கும் சம பங்குண்டு. எனவே, ஜிஎஸ்டி பற்றி பொய்யை பரப்ப வேண்டாம். நேரு வழியில் நாட்டிற்கு சேவை செய்வதில் காங்கிரசை விட பாஜ சிறப்பாகவே செயல்படுகிறது என்று பிரதமர் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications