வாஜ்பாய், மதன்மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்து மகாசபை தலைவராக இருந்த மதன்மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய "பாரத ரத்னா" விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்துமகா சபை என்ற அமைப்புதான் பின்னாளில் ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா ஆகியவற்றுக்கு முன்னோடி இயக்கமாகும். அதன் தலைவராக இருந்தவர் மதன் மோகன் மாளவியா. இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர்.

"பண்டிதர் மாளவியா" என்று போற்றப்பட்ட இவர்தான் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனாரஸ் பல்கலைக் கழகத்தை நிறுவியவர்.
Vajpayee is Vishwaratna. A rare statesman with unlimited tolerance and large heart. Great decision. @narendramodi #BharatRatnaAtalji
— Prabhu Chawla (@PrabhuChawla) December 24, 2014 இதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் முதலாவது பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர் பிரதமர் வாஜ்பாய். தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இவரது பிறந்த நாள் டிசம்பர் 25.
#PresidentMukherjee has been pleased to award Bharat Ratna to Pandit Madan Mohan Malaviya (posthumously) and to Shri Atal Bihari Vajpayee.
— President of India (@RashtrapatiBhvn) December 24, 2014 மத்திய அரசு ஏற்கெனவே இருவரது பிறந்த நாளையும் முன்னிட்டு "நல்லாட்சி" தினமாக பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று இன்று அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக ஜனாதிபதி மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதைப் பெறுகிற முதல் பாஜக தலைவர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications