அனைத்து கிராமங்களுக்கும் நிலையான மின்சாரம்.. மோடி ஆட்சி செய்த பெரும் சாதனை!
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: கடந்த 2015 ஆகஸ்ட் 15ம் தேதி பிரதமர் மோடி, இந்தியா முழுக்க அனைத்து கிராமங்களும் 1000 நாட்களில் மின்சார வசதி உள்ள கிராமங்களாக மாற்றப்படும் என்று கூறினார். இந்த நிலையில் மணிப்பூரில் உள்ள லெய்சாங் என்ற கிராமம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி மின்சார இணைப்பு பெற்றதன் மூலம் இந்தியா முழுக்க 100 சதவிகித கிராமங்கள் மின்சார வசதி பெற்று இருக்கிறது. இந்த சாதனை வெறும் 988 நாட்களில் செய்யப்பட்டுள்ளது.
கிராமங்களில் மின்சார வசதி ஏற்படுத்துவதுதான் பிரதமர் மோடியின் முக்கியமான ஆசைகளில் ஒன்று. மின்சார வசதி ஏற்படுத்தி தருவதாக பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியும் அவர் ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணம் ஆகும். மோடியின் மொத்த 2014 தேர்தல் பிரச்சாரமும் முன்னேற்றம் மற்றும் ஊழலற்ற ஆட்சியை மையமாக கொண்டதுதான்.

கடந்த ஏப்ரல் 29ம் தேதி பிரதமர் மோடியின் டிவிட்டில், ''இந்தியாவின் முன்னேற்றத்தில் வரலாற்றில் நினைவு கொள்ள வேண்டிய நாள் இது'' என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் ''நேற்று நாம் தற்போது பெரிய மாற்றத்தை செய்து இருக்கிறோம். இது பல இந்தியர்களின் வாழ்க்கையை மொத்தமாக மாற்ற போகிறது. இந்தியாவில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் தற்போது மின்சார வசதி உள்ளது.'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
1974ல் இந்திய சுதந்திரத்தின் போது மொத்தம் 1500 கிராமங்களுக்கு மட்டும்தான் மின்சார வசதி இருந்தது, 1991ன் படி 481, 124 கிராமங்களுக்கு மின்சார வசதி உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
[என்ன கொடுமை இது.. 92 வயது பாட்டியை சரமாரியாக அடித்த 102 வயது தாத்தா.. கைது]
2018ன் படி 597,464 கிராமங்களில் தற்போது அனைத்து 597,464 கிராமங்களுக்கும் (100%) மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 10 சதவிகித வீடுகளுக்கு ஒரு கிராமத்தில் மின்சார வசதி தேவைப்பட்டாலும் அங்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் பிரதமர் மோடி இதனுடன் நிற்கவில்லை. எத்தனை கிராமங்களுக்கும் மின்சாரம் கொடுக்கப்பட்டதோ அதேபோல் எல்லா இடங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவை ஒளிமிக்க நாடாக மாற்ற தீவிர முயற்சி செய்து வருகிறது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications