மோடியின் பி.ஏ.பட்டம் உண்மையானது தான்: டெல்லி பல்கலைக்கழகம் தகவல்
டெல்லி: பாஜக தலைவர்களால் வெளியிடப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பி.ஏ. பட்டப் படிப்புச் சான்றிதழ் உண்மையானதுதான் என்று டெல்லி பல்கலைக்கழக பதிவாளர் தருண் தாஸ் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி பெற்ற கல்லூரி பட்டங்கள் பற்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மத்திய தகவல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோடிக்கு டெல்லி பல்கலைக்கழகம் அளித்த பி.ஏ. பட்டம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகம் அளித்த எம்.ஏ. பட்டத்தை டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் பகிரங்கமாக வெளியிட்டனர்.

ஆனால் இந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியாக உருவாக்கப்பட்டவை என ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அஸூதோஷ் குற்றம்சாட்டியுள்ளார். பா.ஜனதா தலைவர்கள் வெளியிட்ட பி.ஏ. மற்றும் எம்.ஏ. டிகிரி சான்றிதழ்களில் காணப்படும் பெயர்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருக்கின்றன.
மோடியின் பி.ஏ. டிகிரி மதிப்பெண் பட்டியலில் 1977 என உள்ளது. ஆனால் பட்டச் சான்றிதழ், படிப்பை 1978-ம் ஆண்டு முடித்ததாக காட்டுகிறது. இது மிகப்பெரிய முரண்பாடு என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தருண் தாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மோடியின் பி.ஏ. மதிப்பெண் சான்றிதழில், அவரது பெயர் "நரேந்திர குமார் தாமோதர்தாஸ் மோடி' என்றும், எம்.ஏ. சான்றிதழில் "நரேந்திர தாமோதர்தாஸ் மோடி' என்றும் உள்ளது.
மாணவர்களின் இடைப்பெயர்கள் விடுபடுவது வழக்கமாக நடக்கும் தவறுதான். மாணவர்கள் சுட்டிக் காட்டும்போது அந்தத் தவறுகளை திருத்தியிருக்கிறோம். அவர் 1978-ல் பட்டப்படிப்பை முடித்து, 1979-ல் பட்டம் பெற்றுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications