பனிமலையோ... பாலைவனமோ... வீரர்களுடன் தான் என் தீபாவளி... நெகிழ வைத்த பிரதமர் மோடி..!
ஜெய்ப்பூர்: பனிமலையோ பாலைவனமோ வீரர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கு தான் எனது தீபாவளி எனக் கூறியிருக்கிறார் பிரதமர் மோடி.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பு வீரர்களுடன் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும் கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில் இந்தாண்டும் மேற்கு எல்லைப் பகுதியான ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள லோங்கேவாலாவில் ராணுவ வீரர்களுடன் தனது தீபாவளியை கொண்டாடினார் மோடி. அப்போது வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.
நாட்டு மக்களின் அன்பை சுமந்துகொண்டு உங்களிடம் வந்திருப்பதாக வீரர்களிடம் கூறிய மோடி ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் நிற்பதாக அவர்களுக்கு உற்சாகமூட்டினார். வீரர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினால் தனது தீபாவளி கொண்டாட்டம் நிறைவானதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார் மோடி.

மேலும், வங்கதேசம் வழியாக இந்தியாவிற்குள் பாகிஸ்தான் ஊடுருவ முயன்ற தருணத்தில் மேஜர் குல்தீப் தலைமையிலான வீரர்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்ததாக பெருமிதம் தெரிவித்தார். இந்திய ராணுவ வீரர்களின் வீரத்திற்கும் தீரத்திற்கும் ஈடு இணையாக எதையும் கூற முடியாது என அவர்களை கவுரப்படுத்தினார் மோடி.
மக்கள் இல்லங்களில் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இல்லங்களில் மக்கள் தீபங்களை ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications