அமீரக 'எஃபெக்ட்': அரபு மொழியில் ட்வீட் செய்த மோடி
டெல்லி: அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி அரபு மொழியில் ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அபுதாபியில் அவரை வரவேற்க பட்டத்து இளவரசர் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். மோடியின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு செய்ய அமீரகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் மோடி அரபு மொழியில் ட்வீட் செய்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
وكانت زيارة الإمارات العربية المتحدة خارقة للطريق، حصلت فرصة التفاعـل مع قيادة الإمارات العليا والإجمتاع مع المستثمرين والمجتمع الهندي
— Narendra Modi (@narendramodi) August 17, 2015 அமீரக பயணம் வெற்றிகரமாக அமைந்தது. அமீரகத்தின் உயர் தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய சமூகத்தினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
سوف تنمو العلاقات بين الدولتين بوتيرة تاريخية، إكتشفنا المجالات الجديدة للتعاون ودعوت المستثمرين لمشاهدة التغييرات فى الهند
— Narendra Modi (@narendramodi) August 17, 2015 இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவு வரலாற்று சிறப்புமிக்க விதத்தில் வளர உள்ளது. ஒத்துழைத்து செயல்பட புதிய விவகாரங்களை கண்டுபிடித்துள்ளோம். இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காண வருமாறு முதலீட்டாளர்களை அழைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications