பாஜக அணிக்கு 300 சீட்.. ஆரூடம் சொன்ன டெல்லி தொழிலதிபருக்கு மோடி நன்றி கடிதம்
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 300 இடங்கள் கிடைக்கும் என்று கணித்த டெல்லி தொழிலதிபர் விஜய் பன்சாலுக்கு நரேந்திர மோடி நன்றி கடிதம் அனுப்பியுள்ளார்.
மேற்கு டெல்லியில் வசித்து வருபவர் தொழிலதிபர் விஜய் பன்சால். இவர் கடந்த 1984ஆம் ஆண்டு தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு 365 இடங்கள் கிடைக்கும் என்று கணித்து அப்போது ராஜிவ் காந்திக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் ஜோதிடக்காரர்களோ 225 இடங்கள்தான் காங்கிரஸுக்கு கிடைக்கும் என்று அப்போது கூறி வந்தனர்.

இருப்பினும் 400 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து விஜய் பன்சாலை வரவழைத்து தேநீர் விருந்து கொடுத்தார் ராஜிவ் காந்தி. கடந்த ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைக் கைப்பற்றும் என்றும் பன்சால் கணித்திருக்கிறார். இதை அரவிந்த் கேஜ்ரிவாலிடமே தெரிவித்த போது அவரே நம்பவில்லையாம். ஊடகங்கள் அனைத்தும் 6 இடங்கள்தான் ஆம் ஆத்மிக்கு கிடைக்கும் என்று கூறின.
ஆனால் பன்சால் கணிப்பின்படி 28 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்ற அரவிந்த் கேஜ்ரிவால் விஜய் பன்சாலை வரவழைத்து தேநீர் விருந்து கொடுத்தாராம். இப்போது பாஜக தலைமையிலான கூட்டணி 300 இடங்களைக் கைப்பற்றும் என அக்கட்சித் தலைவர்களான ராஜ்நாத்சிங், அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி மற்றும் நரேந்திர மோடிக்கு பன்சால் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இவர்களில் நரேந்திர மோடி மட்டும் பன்சாலுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications